சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : நவ 28, 2019
Advertisement

அறிவியல் ஆயிரம்

தாய்ப்பாலின் மகிமை


பத்து மாதம் தாயின் கருவறையில் இருந்து பிறந்த குழந்தை, முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால். இது தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. அனைத்து சத்துகளும் தாய்ப்பாலில் இயற்கையாகவே அமைந்துள்ளன. பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் தாய்ப்பால் குழந்தைகளுக்கு இருதய பிரச்னையை தடுக்கிறது என ஹார்வேர்டு, ஆக்ஸ்போர்டு மற்றும் டொரண்டே பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் சுரங்கம்

உயரமான கட்டடம்


இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் 'ஸ்கைகிராப்பர்' என அழைக்கப்படும் பல உயரமான கட்டடங்கள் உள்ளன. இதில் 'பலைஸ் ராயலே' என்ற கட்டடம், இந்தியாவின் உயரமான கட்டடங்களில் ஒன்றாக திகழ்கிறது. இதன் உயரம் 1050 அடி. இதன் கட்டுமானப்பணி 2008ல் துவங்கியது. 2020ல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ. 3,000 கோடி. இதில் 88 மாடிகள் உள்ளன. 12 லிப்ட்கள் உள்ளன. 120 அபார்ட்மென்ட் வீடுகள் உள்ளன. இங்கு தியேட்டர், விளையாட்டு மைதானம், நீச்சல்குளம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X