பிரவம்: கேரளாவில், ஈய பானைக்குள் தலை சிக்கிக் கொண்டதால், உயிருக்கு போராடிய 3 வயது குழந்தையை, துரிதமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு, பாராட்டுகள் குவிகின்றன.கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள பிரவம் பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரஹாம் - ஜிஜி தம்பதி. இவர்களுக்கு, பியான், 3, என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த குழந்தை, நேற்று காலையில், கையில் வைத்திருந்த ஈய பானையை, தலையில் கவிழ்த்து விளையாடிய போது, பானை தலைக்குள் சிக்கி கொண்டது. பானையின் வாய்ப்பகுதி, மிகவும் சிறியதாக இருந்ததால், வெளியே எடுக்க முடியவில்லை. அக்கம் பக்கத்தினர் முயற்சித்தும், பலன் அளிக்கவில்லை. நேரம் ஆக ஆக, குழந்தை பயத்தில் கதறி அழ துவங்கியது; மூச்சு திணறலும் ஏற்பட்டது. அப்போது, அவ்வழியே வந்த ஜோஜின் என்பவர், குழந்தையை அருகில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்துக்கு துாக்கி சென்றார்.தீயணைப்பு வீரர்கள், முதலில் குழந்தையை ஆசுவாசப்படுத்தினர்; தைரியமாக இருக்குமாறு நம்பிக்கை அளித்தனர். பின், 'கட்டர்' போன்ற உபகரணங்களை பயன்படுத்தி, ஈய பானையை அறுத்து, 15 நிமிடங்களில் குழந்தையை மீட்டனர். தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு, குழந்தையை மீட்டது, அப்பகுதியினர் இடையே பாராட்டுகளை குவித்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE