ஊழல் அதிகாரிகளுக்கு ஓய்வு

Added : நவ 28, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 ஊழல் அதிகாரிகளுக்கு ஓய்வு

ஊழல் அதிகாரிகளுக்கு ஓய்வு
மத்திய அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில், ஊழல் புகார்களில் சிக்கிய, 96 அதிகாரி களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. திறமையற்ற, ஊழல் புகார்களில் சிக்கும் அதிகாரிகளுக்கு, முன்கூட்டியே ஓய்வு அளிக்க, அரசுக்கு உரிமை உள்ளது. இந்த நடவடிக்கை, வரும் ஆண்டுகளிலும் தொடரும்.ஜிதேந்திர சிங்மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர், பா.ஜ.,
லாபகரமாக்க நடவடிக்கை
தொலைபேசி நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நாட்டின் சொத்துக்கள். நிலநடுக்கம், புயல் போன்ற இயற்கை பேரழிவு ஏற்படும் காலங்களில், மக்களுக்கு உதவி செய்கின்றன. இவற்றை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதனால் தான், இந்த இரண்டு நிறுவனங்களில், விருப்ப ஓய்வு திட்டத்தை அமல்படுத்தி, அவற்றை லாபகரமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ரவிசங்கர் பிரசாத்மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர், பா.ஜ.,
16.34 கோடி வீடுகளில் கழிப்பறை
நாட்டின் கிராமப்புறங்களில், 16.34 கோடிக்கும் அதிகமான வீடுகளில், கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், உத்தர பிரதேசத்தில், 2.84 கோடி வீடுகள்; பீஹாரில், 1.59 கோடி வீடுகள்; மேற்கு வங்கத்தில், 1.37 கோடி வீடுகள் அடங்கும். நாட்டில், திறந்தவெளி கழிப்பறைகள் இல்லாத நிலையை ஏற்படுத்துவதில், அரசு உறுதியாக உள்ளது.கஜேந்திர சிங் ஷெகாவத்மத்திய ஜல சக்தி துறை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SESHASAYEE S - TIRUCHIRAPALLI,இந்தியா
29-நவ-201921:19:49 IST Report Abuse
SESHASAYEE S ஊழல் அதிகாரிகளுக்கு ஓய்வு கொடுப்பதும், பொதுத்துறை தொலைபேசி நிறுவனங்களில் விருப்ப ஓய்வு கொண்டு வந்ததும். மிகவும் தேவையான நடவடிக்கைகள். ஊழல் அதிகாரிகள் மற்ற பணியாளர்களையும் கெடுத்து விடுவார்கள். பொதுத்துறை தொலைபேசி நிறுவனங்களுக்கு தேவை திறமையான பணியாளர்களும் உடனடி முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள அதிகாரிகளும், சமீபத்திய தொழில்நுட்பம் மற்றும் இவைகளுக்காக அரசாங்கத்தின் ஒத்துழைப்புமே.
Rate this:
Share this comment
Cancel
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
29-நவ-201901:17:15 IST Report Abuse
S.V.SRINIVASAN ஊழல் அதிகாரிகளுக்கு ஒய்வு கொடுத்து அனுப்பி விட்டீர்கள். ஊழல் அரசியல்வாதிகள் நிறையபேர் இருக்கிறார்களே அவர்களுக்கு யார் ஒய்வு கொடுப்பது என்பதையும் சொல்லி விட்டீர்கள் என்றால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X