அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக உள்ளன: பார்லிமென்டில் மத்திய அரசு அறிவிப்பு | Dinamalar

அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக உள்ளன: பார்லிமென்டில் மத்திய அரசு அறிவிப்பு

Updated : நவ 30, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (1)
Share
புதுடில்லி, :''கூடங்குளம் அணுமின் நிலையத்தில், வைரஸ் தாக்குதல் நடந்ததாக வெளியான தகவலை அடுத்து, நாட்டில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன,'' என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ராஜ்யசபாவில் தெரிவித்தார். ராஜ்யசபாவில் நேற்று, பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங்
 அணுமின், நிலையங்கள்,பாதுகாப்பாக,உள்ளன, பார்லிமென்டில் மத்திய அரசு ,அறிவிப்பு

புதுடில்லி, :''கூடங்குளம் அணுமின் நிலையத்தில், வைரஸ் தாக்குதல் நடந்ததாக வெளியான தகவலை அடுத்து, நாட்டில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன,'' என, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

ராஜ்யசபாவில் நேற்று, பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங் கூறியதாவது:

தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கம்ப்யூட்டர் களுக்குள் ஊடுருவி, வைரஸ் தாக்குதல் நடத்தி, மர்ம நபர்கள் தகவல்களை திருடியதாக, சமீபத்தில் செய்திகள் வெளியாகின.


முன் எச்சரிக்கைஇதையடுத்து, நாட்டில் உள்ள எல்லா அணுமின் நிலையங்களிலும், போதிய பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.தற்போது நாட்டில் உள்ள எல்லா அணுமின் நிலையங்களும் பாதுகாப்பாக உள்ளன. அணுமின் நிலையங்களை பொறுத்தவரை, முதலில் பாதுகாப்பு, அப்புறம் உற்பத்தி என்ற கொள்கையை, அரசு பின்பற்றி வருகிறது. அணுமின் நிலையத்தின் அணு உலை கட்டுப்பாட்டு நடைமுறை, 'இன்டர்நெட்' உள்ளிட்ட, எந்த ஒரு வெளி நெட்ஒர்க்குடனும் இணைக்கப்படவில்லை.எனவே, அணு உலை தொடர்பான விஷயங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.


குழு அமைப்பு

அணுமின் நிலையங்களில், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, இணைய பாதுகாப்பு தொடர்பான தணிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதல்களை கட்டுப்படுத்த, ஐ.ஐ.டி., இயக்குனர்கள் உள்ளிட்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு ஆய்வு, நெட்ஒர்க் க்ளீனீங், 'இ - மெயில்'களை ஸ்கேன் செய்யும் நடவடிக்கை, புள்ளி விபர பாதுகாப்பு, இணைய கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.


ஆபாச இணையதளங்கள் முடக்கம்ராஜ்யசபாவில் நேற்று, அ.தி.மு.க., - எம்.பி., விஜிலா சத்யானந்த் பேசியதாவது:குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலான இணையதளங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் மிக ஆபாசமான காட்சிகள் உள்ளன. குழந்தைகளுக்கு எளிதாக மொபைல் போன் கிடைப்பதால், இந்த இணையதளங்களை, அவர்கள் பார்க்க நேரிடும். சமீபத்தில் கூட, சிறுமியர் சிலர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டனர். எனவே, ஆபாச படங்களை, காட்சிகளை சித்தரிக்கும் இணையதளங்களையும், சமூக வலைதளங்களையும் தடை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: குழந்தைகள் பற்றிய ஆபாச காட்சி கள் இடம் பெற்ற, 377 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 50 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டு உள்ளன. சிறுமியருக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்த விபரங்கள் கிடைத்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X