டில்லி வந்தார் கோத்தபயா இன்று மோடியுடன் சந்திப்பு

Added : நவ 28, 2019
Advertisement

புதுடில்லி, : இரண்டு நாள் பயணமாக, அண்டை நாடான இலங்கையின் புதிய அதிபர் கோத்தபயா ராஜபக்சே, டில்லிக்கு நேற்று வந்து சேர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார்.இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்று, கோத்தபயா ராஜபக்சே அதிபரானார். அதைத் தொடர்ந்து, அவருடைய அண்ணனும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜ்பக்சே, பிரதமராக பதவியேற்றார்.தேர்தலில் வென்றதும், கோத்தபயாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சென்று, மோடியின் வாழ்த்து கடிதத்தை கொடுத்தார்; இந்தியாவுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.அதையேற்று, கோத்த பயா நேற்று டில்லிக்கு வந்தார். அதிபரான பிறகு, அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.பிரதமர் மோடியை, அவர் இன்று சந்தித்து பேசுகிறார். இலங்கையில் உள்ள தமிழர் நலன், மீனவர் பிரச்னை உட்பட பல முக்கிய அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியப் பெருங்கடல் உள்ளிட்ட கடல் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த, சீனா முயன்று வருகிறது. இதற்காக, இலங்கைக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியா, இலங்கை இணைந்து செயலாற்றுவது தொடர்பாக பேசப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வைகோ ஆர்ப்பாட்டம்இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, டில்லியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.''மோடி அரசு, இலங்கையுடன் நட்பு பாராட்டுகிறது.
இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்களை கொன்ற, போர்க் குற்றவாளி கோத்தபயா. அவருடனான நெருக்கம், இலங்கையில் உள்ள தமிழர்களை அச்சமடைய செய்துள்ளது,'' என, வைகோ கூறினார்.போராட்டத்தில் ஈடுபட்ட, நான்கு பெண்கள் உள்பட, 125 பேர் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் சில மணி நேரம் வைக்கப்பட்டனர்; பின், விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X