பொது செய்தி

தமிழ்நாடு

3 புதிய மருத்துவ கல்லூரிகள்: இடம் தேர்வு

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை, புதிதாக மூன்று மருத்துவக் கல்லுாரிகள் அமைப்பதற்கான இடத்தை, தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.தமிழகத்தில், ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் திருப்பூர் என ஆறு மாவட்டங்களில், புதிய மருத்துவக் கல்லுாரிகள் அமைக்க, ஒரு மாதத்திற்கு முன், மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
ஒவ்வொரு மருத்துவக் கல்லுாரியும், 325 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ளது. இதற்காக, தமிழக அரசு முதற்கட்டமாக, தலா, 100 கோடி ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், கட்டுமான பணிக்கான முன்னேற்பாடுகளை, பொதுப்பணித்துறை துவக்கியுள்ளது. இந்நிலையில், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், மருத்துவக் கல்லுாரி துவக்க, மத்திய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்துள்ளது.

மருத்துவக் கல்லுாரிகள் அமையும் இடங்களை, தமிழக அரசு இறுதி செய்துள்ளது. இதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம், ஒரத்துாரில், 58.6 ஏக்கர் நிலம்; கிருஷ்ணகிரி மாவட்டம், கொள்ளுபள்ளியில், 25 ஏக்கர், திருவள்ளூர் மாவட்டம், பெரும்பாக்கத்தில், 22 ஏக்கர் நிலமும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.விரைவில், இந்த மருத்துவக் கல்லுாரிகள் கட்டுமானப் பணிக்கும் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட உள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X