பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர்களுக்கு ஆணையம் உத்தரவு

Added : நவ 28, 2019
Share
Advertisement
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, நேற்று ஆலோசனை நடத்தினார்.இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும், ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும் என, தேர்தல் நடத்தும் அலுவலர்களான, மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்த கூட்டங்களில் அரசியல் கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு, தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
 கலெக்டர்களுக்கு  ஆணையம் உத்தரவு

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, நேற்று ஆலோசனை நடத்தினார்.இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும், ஆலோசனை கூட்டங்களை நடத்த வேண்டும் என, தேர்தல் நடத்தும் அலுவலர்களான, மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அந்த கூட்டங்களில் அரசியல் கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு, தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அவர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.அமைதியான முறையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்கும்படி, அவர்களிடம் வலியுறுத்தவும், கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மாநில தேர்தல் ஆணைய உத்தரவின் படி, விரைவில், அனைத்து மாவட்டங்களிலும், தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இந்த கூட்டங்களில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ள, 11 அரசியல் கட்சிகள் மட்டுமே பங்கேற்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X