20 கோடி டன் நிலக்கரி சுரங்கங்கள்: ஜெகனால் தமிழகத்திற்கு நெருக்கடி

Updated : நவ 29, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
நிலக்கரி, சுரங்கங்கள்,ஜெகன்,தமிழகம்,நெருக்கடி

ஒடிசா மாநிலத்தில் உள்ள, 20 கோடி டன் நிலக்கரி சுரங்கத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி, ஆந்திர அரசு முட்டி மோதுவதால், தமிழகத்திற்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருவள்ளூர், துாத்துக்குடி, ராமநாதபும் மாவட்டங்களில், மின்வாரியம், புதிய அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது.இவற்றில் எரிபொருளாக, நிலக்கரி பயன்படுத்தப்பட உள்ளது.மத்திய அரசின், 'கோல் இந்தியா' நிறுவனத்திற்கு, ஒடிசா மாநிலத்தில், உட்கல், 13 கோடி டன்; மந்தாகினி, 75 லட்சம் டன் இருப்புள்ள, நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அவற்றை ஒதுக்கீடு செய்ய, அந்நிறுவனம், மாநில மின் வாரியங்களிடம் விண்ணப்பம் பெற்று உள்ளது. அதற்கு, தமிழக மின் வாரியமும் விண்ணப்பித்து உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, கோவா, குஜராத் மாநிலங்களும் விண்ணப்பித்து உள்ளன. இதுவரை, யாருக்கும் சுரங்கம் ஒதுக்கப்படவில்லை. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உட்கல், மந்தாகினி சுரங்கங்களை கேட்டு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனால் அவை, தமிழகத்திற்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மந்தாகினி, உட்கல் நிலக்கரி சுரங்கங் களை பெறுவதில், ஐந்து மாநிலங்கள் விண்ணப்பித்தாலும், தமிழகம், ஆந்திரா இடையே தான் போட்டி நிலவுகிறது.தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, சில தினங்களுக்கு முன், மத்திய நிலக்கரி துறை அமைச்சரை சந்தித்து, இரு சுரங்கங்களையும் ஒதுக்கும்படி வலியுறுத்தினார். அதன்படி, அவை, தமிழகத்திற்கு ஒதுக்கினால், அவற்றில் இருந்து, 20 ஆண்டுகளுக்கு நிலக்கரி கிடைக்கும். இதனால், தனியாரிடம், நிலக்கரி வாங்க வேண்டிய நிலை வராது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
29-நவ-201917:43:49 IST Report Abuse
Sridhar ஆச்சரியமாய் இருக்கு. பொதுவாக, அரசியல்வாதிகளுக்கு இறக்குமதி பண்ணி அதில் கமிஷன் பார்ப்பதில்தானே ஆர்வம் இருக்கவேண்டும்? இரண்டுபேருமே உள்நாட்டு நிலக்கரிக்கு மோதுவதை பார்த்தால் இதில் என்ன விளையாட்டு என்றே புரிவில்லையே? மத்திய அரசு போல எல்லா மாநில அரசுகளும் நேர்மையா ஆயிடுச்சா?
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
29-நவ-201916:37:51 IST Report Abuse
Ramesh R அவன் அங்கு முட்டி மோதுவான் இங்கு நம் நாட்டில் டி குடித்து கொண்டு இருப்பார்கள்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
29-நவ-201916:31:32 IST Report Abuse
konanki தெலுங்கு தேசத்தில் இருந்து வந்து மிக மிக சக்தி வாய்ந்த அரசியல் குடும்பம் இங்கு கொலோசிச்சும் போது இப்பிடி தான் இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X