20 கோடி டன் நிலக்கரி சுரங்கங்கள்: ஜெகனால் தமிழகத்திற்கு நெருக்கடி| Dinamalar

20 கோடி டன் நிலக்கரி சுரங்கங்கள்: ஜெகனால் தமிழகத்திற்கு நெருக்கடி

Updated : நவ 29, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (7)
Share
நிலக்கரி, சுரங்கங்கள்,ஜெகன்,தமிழகம்,நெருக்கடி

ஒடிசா மாநிலத்தில் உள்ள, 20 கோடி டன் நிலக்கரி சுரங்கத்தை தங்களுக்கு ஒதுக்கும்படி, ஆந்திர அரசு முட்டி மோதுவதால், தமிழகத்திற்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருவள்ளூர், துாத்துக்குடி, ராமநாதபும் மாவட்டங்களில், மின்வாரியம், புதிய அனல் மின் நிலையங்களை அமைத்து வருகிறது.இவற்றில் எரிபொருளாக, நிலக்கரி பயன்படுத்தப்பட உள்ளது.மத்திய அரசின், 'கோல் இந்தியா' நிறுவனத்திற்கு, ஒடிசா மாநிலத்தில், உட்கல், 13 கோடி டன்; மந்தாகினி, 75 லட்சம் டன் இருப்புள்ள, நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. அவற்றை ஒதுக்கீடு செய்ய, அந்நிறுவனம், மாநில மின் வாரியங்களிடம் விண்ணப்பம் பெற்று உள்ளது. அதற்கு, தமிழக மின் வாரியமும் விண்ணப்பித்து உள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா, கோவா, குஜராத் மாநிலங்களும் விண்ணப்பித்து உள்ளன. இதுவரை, யாருக்கும் சுரங்கம் ஒதுக்கப்படவில்லை. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உட்கல், மந்தாகினி சுரங்கங்களை கேட்டு, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதனால் அவை, தமிழகத்திற்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:மந்தாகினி, உட்கல் நிலக்கரி சுரங்கங் களை பெறுவதில், ஐந்து மாநிலங்கள் விண்ணப்பித்தாலும், தமிழகம், ஆந்திரா இடையே தான் போட்டி நிலவுகிறது.தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, சில தினங்களுக்கு முன், மத்திய நிலக்கரி துறை அமைச்சரை சந்தித்து, இரு சுரங்கங்களையும் ஒதுக்கும்படி வலியுறுத்தினார். அதன்படி, அவை, தமிழகத்திற்கு ஒதுக்கினால், அவற்றில் இருந்து, 20 ஆண்டுகளுக்கு நிலக்கரி கிடைக்கும். இதனால், தனியாரிடம், நிலக்கரி வாங்க வேண்டிய நிலை வராது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X