பொது செய்தி

தமிழ்நாடு

பழைய பத்திரங்கள், 'ஸ்கேனிங்' முடக்கம்: பணியாளர் சம்பள பிரச்னையால் சிக்கல்

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை,: ஒப்பந்த நிறுவனங்கள், பணியாளர் இடையிலான சம்பள பிரச்னையால், சார் பதிவாளர் அலுவலகங்களில், பழைய பத்திரங்களை, 'ஸ்கேன்' செய்யும் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், 2009க்கு பின் பதிவான பத்திரங்கள் அனைத்தும், கணினி முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன. ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவு செய்யும் போது, இதை சரிபார்ப்பதில் சிக்கல் இல்லை.ஆனால், 1865 முதல், 2009 வரை பதிவான பத்திரங்களை, ஸ்கேன் செய்யப்பட்டு, கணினியில் சேர்க்கப்படுகின்றன.

இதற்காக, ஆறு நிறுவனங்கள் நியமிக்கப் பட்டுள்ளன.இந்நிறுவனங்கள், ஒரு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு, இரண்டு பேர் வீதம், 575 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும், பணியாளர்களை அனுப்பி உள்ளன. இவர்களது பணிகளை, சார் பதிவாளர்கள் சரி பார்க்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர். ஆட்களை நியமித்த ஒப்பந்த நிறுவனங்கள், அவர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்கவில்லை என, புகார் எழுந்தது.

இதனால், பணியாளர்கள், ஸ்கேனிங் பணிக்கு வராமல் உள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மண்டலங்களில், பணியாளர்கள் வராத நிலையில், ஸ்கேனிங் பணிகள் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகின்றன.இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:பதிவுத்துறை தலைமையக அதிகாரிகள் தான், ஒப்பந்த நிறுவனத்துடன் பேச்சு நடத்த வேண்டும். பணிகள் முடங்கினால், பதிவுத்துறைக்கு தான் பாதிப்பு. எனவே, அதிகாரிகள் இதற்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X