பொது செய்தி

தமிழ்நாடு

பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் காரணமா? : நடிகர் பாக்கியராஜ் மீது போலீசில் புகார்

Added : நவ 28, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் காரணமா? :  நடிகர் பாக்கியராஜ் மீது போலீசில் புகார்

சென்னை, :'பாலியல் குற்றங்கள் அதிகரிக்க, பெண்களே காரணம் என்பது போல, அவர்களின் கவுரவத்தை இழிவுப்படுத்தி பேசியுள்ள, நடிகர் பாக்கியராஜ் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.சென்னை, திருநின்றவூரைச் சேர்ந்தவர் கலைச்செல்வி; சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனரான இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்துள்ள புகார்:

நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ், சென்னையில், 25ம் தேதி நடந்த, கருத்துக்களை பதிவு செய் என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, கள்ளக்காதல் மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கவும், அது சார்ந்து நடக்கும் கொலைகளுக்கும் பெண்களே காரணம் என்பது போல, 'ஊசி இடம் தராமல் நுால் நுழையாது' என, பேசியுள்ளார்.மேலும், 'ஆண்கள் தகாத உறவு வைத்திருந்தாலும், அது யாருக்கும் தொந்தரவு இல்லை. பெண்கள் தவறு செய்தால், பெரிய பிரச்னையாகி விடும்.'எனவே, பெண்களுக்கு சுய கட்டுப்பாடு அவசியம். பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்திற்கு பெண்களும் காரணம்.'பெண்களின் பலவீனத்தை ஆண்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். மொபைல் போன் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, பெண்கள் எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றனர். அதனால், தவறும் சுலபமாக நடக்கிறது' என, பேசியுள்ளார்.

அவரது பேச்சானது, பெண்கள் அனைவரும் குற்றவாளிகள்; ஒழுக்கம் கெட்டவர்கள் போல சித்தரிக்கிறது. குழந்தைகள், பெண்கள் மற்றும் மூதாட்டிகள் என, பாலியல் தொல்லைக்கு ஆளாகி வரும் நிலையில், பாக்கியராஜின் பேச்சு, ஆணாதிக்க மனோபாவம் உடையதாக உள்ளது.அவரது பேச்சு, பெண்களிடையே மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. பாக்கியராஜ் மீது, பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
29-நவ-201913:11:20 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பாக்கியராஜ் சொன்னதில் தப்பில்லை. ஊசி இடன்கொடுப்பதால்தான் நூல் நுழைகிறது. பாலியல் குற்றங்களுக்கு பெண்களும் காரணம் என்பது உண்மை. ஆபாச உடைகள் uduthi திரியும் alangolangal adanginaal பாலியல் kutram varaathu.
Rate this:
Share this comment
Cancel
krishna_dharan - NJ,யூ.எஸ்.ஏ
29-நவ-201900:08:17 IST Report Abuse
krishna_dharan இவன் யார்கிட்ட பணம் வாங்கினானோ வாங்கின காசுக்கு வஞ்சகம் இல்லாமல் கூவுகிறான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X