பொது செய்தி

இந்தியா

ஐ.எஸ்., அமைப்பில் இணைந்த கேரள தம்பதி

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (54)
Advertisement
ஐ.எஸ்.,  கேரள தம்பதி , isis, kerala couple

திருவனந்தபுரம்: ஆப்கானிஸ்தானில் சரணடைந்துள்ள ஐ.எஸ்., பயங்கரவாதிகளில், தன் மகளும், மருமகனும் இருப்பதை, கேரளாவை சேர்ந்த பெண் உறுதி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர், பிந்து சம்பத். இவருக்கு, நிமிஷா என்ற மகள் உள்ளார். நிமிஷாவுக்கும், பெக்சின் என்பவருக்கும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். அதன் பின், நிமிஷா என்ற பெயரை, பாத்திமா என்றும், பெக்சின் என்ற பெயரை, இஷா என்றும் மாற்றிக் கொண்டனர்.இவர்கள், கேரளாவை சேர்ந்த அப்துல் ரஷீத் என்ற ஐ.எஸ்., பயங்கரவாதியுடன் சேர்ந்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் சென்றனர். அங்கு, இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

அங்கு இருந்தபடியே, தாயார் பிந்துவுடன், தொலைபேசியில் மகள் நிமிஷா பேசி வந்தார். தன் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை, 'இ - மெயில்' வாயிலாக அனுப்பியுள்ளார். கடந்த ஆண்டு, நவம்பர் 26ல், கடைசியாக தன் தாயாருடன், நிமிஷா போனில் பேசியுள்ளார். அதன் பின், அவர்களிடம் இருந்து தகவல் எதுவும் இல்லை.
இந்நிலையில், பிந்துவை அவரது வீட்டில் சந்தித்த தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள், ஆப்கனில் சமீபத்தில் சரணடைந்த சில ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் புகைப்படங்களை காட்டினர். அதில், தனது மகள், மருமகன் மற்றும் பேரக் குழந்தை இருப்பதை, பிந்து உறுதி செய்தார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் வசித்து வரும், பெக்சினின் தாயார் கிரேசி தாமஸ், புகைப்படத்தை பார்த்து, தனது மகனை அடையாளம் காட்டினார். தங்கள் பிள்ளைகளும், பேரக் குழந்தையுடன், பத்திரமாக தாயகம் திரும்புவர் என, இரு தாய்மார்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
29-நவ-201916:08:10 IST Report Abuse
Endrum Indian தீவிரவாத குலம் இரண்டுமே ஒன்று தான் என்று தெளிவு படுத்திய கேரளா முஸ்லிம்களுக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
29-நவ-201914:50:07 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்து , கிறித்துவர் இருவருமே மூர்க்க மதத்திற்கு மாறிய பிறகு நாட்டை விட்டு வேறு நாட்டிற்கு சென்று போரிடுகிறார்கள் , அங்கெ குடும்பமே நடத்தமுடியாது , அங்கே குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இவர்களை பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வரவேண்டுமாம். அங்கேயே தீவிரவாதிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை கொடுக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
29-நவ-201914:48:48 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் என்ன ஆச்சரியம் , திருட்டு பெயர் கும்பலை இந்த கருத்து பகுதியில் காணவில்லை
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
29-நவ-201916:35:51 IST Report Abuse
Nallavan Nallavanஎதை ஆதரிக்கிறது, எதை எதுக்குறது -ன்னு புரியாமே சங்கடமா இருக்காம் ........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X