பயங்கரவாதத்திற்கு தண்டனை சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு

Added : நவ 28, 2019
Advertisement

புதுடில்லி: 'ஊழல், பயங்கரவாதம் போன்ற கொடிய குற்றங்களுக்கு, ஏக கால சிறைத் தண்டனை அளிக்கக் கூடாது' எனக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை, சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு ஏற்றுள்ளது.விசாரணைபா.ஜ., தலைவரும், வழக்கறிஞருமான, அஸ்வினி உபாத்யாயா, மார்ச்சில், பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், 'ஒரு குற்றவாளி, பல்வேறு குற்றங்களுக்கான சிறைத் தண்டனைகளை, ஏக காலத்தில் அனுபவிக்க லாம் என, இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம் கூறுகிறது;

இது, ஊழல், பயங்கரவாதம் போன்ற கொடிய குற்றங்களுக்கு பொருந்தாது என, உத்தரவிட வேண்டும்' என,தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், பொதுநல மனுவை, அவசர வழக்காக விசாரிக்க கோரி, அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனு, நேற்று, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்விசாரணைக்கு வந்தது.அப்போது, வழக்கு தொடர்பான ஆவணங்கள், மத்திய அரசு அளித்துள்ள பதில் மனு ஆகியவற்றை பரிசீலித்த அமர்வு, இவ்வழக்கை விசாரணைக்குஏற்பதாக அறிவித்தது. சிறப்பு சட்டம்இது குறித்து, அஸ்வினி உபாத்யாயா கூறியதாவது:ஊழல் தடுப்பு சட்டம், பயங்கரவாத தடுப்பு சட்டம் போன்ற சிறப்புச் சட்டங்களின் கீழ், தண்டனைகள் பெறும் ஒருவர், அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க கூடாது; அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டும்.இது, அமெரிக்கா போன்ற பல நாடுகளில், அமலில் உள்ளது. இதை, இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன். இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. அடுத்த நான்கு வாரங்களில், மனு விசாரணைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X