பொது செய்தி

இந்தியா

28 ஆண்டுகளில் 53, 'டிரான்ஸ்பர்': நேர்மையான அதிகாரிக்கு கிடைத்த, 'பரிசு'

Updated : நவ 29, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
 28 ஆண்டுகளில் ,53, 'டிரான்ஸ்பர்', நேர்மையான,அதிகாரிக்கு கிடைத்த, 'பரிசு'

சண்டிகர்: ஹரியானா மாநிலத் தைச் சேர்ந்த, நேர்மையான, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அசோக் கெம்கா, தன், 28 ஆண்டு பணிக்காலத்தில், 53வது முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

ஹரியானா மாநிலத்தில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா, 54. நேர்மையான அதிகாரியான இவர், அரசியல்வாதிகளின் அலைக்கழிப்புக்கு ஆளாகி வருகிறார்.

கடந்த, 2012ல், ஹரியானாவில், காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா நிறுவனத்தின் நிலம் தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்தார். இதையடுத்து, ஆட்சியாளர்களின் அதிருப்திக்கு ஆளானார். அரசியல்வாதிகள், ஆட்சி யாளர்களின் விருப்பப்படி நடக்காததால், தன்னுடைய, 28 ஆண்டு கால பணியில், 52 முறை, பல்வேறு பணிகளுக்கு பந்தாடப்பட்டார்.
இந்நிலையில், நேற்று ஹரியானாவில், 14 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப் பட்டதாக, மாநில அரசு அறிவித்தது.இதில், அசோக் கெம்கா பெயரும் இடம் பெற்றுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் முதன்மை செயலராக பணியாற்றி வந்த அவர், அருங்காட்சியகம் மற்றும் ஆவண காப்பகத்தின் முதன்மை செயலராக மாற்றப்பட்டு உள்ளார். இது குறித்து, அசோக் கெம்கா, 'நேர்மைக்கு கிடைத்த பரிசு' என, சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
29-நவ-201914:51:16 IST Report Abuse
J.Isaac Blocked user லஞ்சத்தை ஒழிப்போம் என்றால் நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு உதவத்தானே வேண்டும் . மாறுதல் கொடுக்கலாமா ?
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
29-நவ-201912:57:01 IST Report Abuse
rajesh இதை கேட்டால் இது வழக்கமாக நடக்கும் இட மாற்றம் என்று சப்ப கட்டு காட்டுவார்கள்.....யாரும் நேர்மையான அரசியல் வாதிகள் அல்ல...... அரசு அதிகாரிகளை தங்கள் சுய லாபத்திற்காக பயன்படுத்தி கொள்வார்கள்
Rate this:
Cancel
B Srinivasan - trichy,இந்தியா
29-நவ-201912:04:02 IST Report Abuse
B Srinivasan தங்கள் நேர்மைக்கு நான் தலைவணங்குகிறேன். என்ன சோதனை வந்தாலும் நேர்மை நாணயம் உங்களை காக்கும் ஆகவே கடைசிவரை இதுபோலவே இருங்கள். ஆண்டவன் நல்லவர்களை சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்.
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
05-டிச-201919:19:58 IST Report Abuse
THENNAVANஇவரது திறமை அபரிமிதமாக இருக்கு அதனால பலதுறைகளிலும் இவரது சேவை தேவைப்படுது அப்படினு எடுத்துக்கலாம் .பழிவாங்கும் எண்ணம் என எடுக்கவேண்டாம் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X