செலவை மிச்சம் பிடிக்கும் மோடி

Updated : நவ 30, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (34+ 71)
Advertisement
 செலவை, மிச்சம்,பிடிக்கும்,மோடி

டில்லி: 'பிரதமர் மோடி, வெளிநாட்டு பயணங்களின் போது, எதிர்பாராமல் பயணம் தடைபட்டால், நட்சத்திர ஓட்டலில் தங்காமல், விமான நிலையத்திலேயே தங்குகிறார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில், எஸ்.பி.ஜி., எனப்படும், சிறப்பு பாதுகாப்பு படை சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது, அவர் மேலும் பேசியதாவது:மோடி, தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்க்கையிலும் ஒழுக்கத்தை கடைப்பிடித்து வருகிறார்.

வெளிநாட்டு பயணத்தில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் புறப்பட தாமதமானால், ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்காமல், விமான நிலையத்திலேயே தங்குகிறார். வெளிநாடு செல்லும்போது, தன்னுடன், 20 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களையே அழைத்துச் செல்கிறார். முந்தைய ஆட்சியில், அதிகாரிகள் தனி கார்களில் செல்வர். தற்போது, அவர்கள் பஸ் அல்லது பெரிய வாகனத்தில் ஒன்றாக செல்கின்றனர். சோனியா குடும்பம், பல சமயங்களில், சிறப்பு பாதுகாப்பு படையின் விதிமுறைகளை மீறியுள்ளது.

லோக்சபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இப்படி பேசினார்: பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டால், சொகுசு ஓட்டலில் தங்குவதில்லை. விமான நிலைய அறையிலேயே தங்குவார். தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் திட்டமிட்டு எளிமையாக வாழ்பவர் மோடி. மாநிலங்களுக்கு பயணம் செல்லும்போது 20 க்கும் குறைவான பணியாளர்களையே அழைத்துச் செல்வார். பாதுகாப்பு விதிகளை மோடி ஒரு போதும் மீறியதில்லை. இதில் அவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

ஆனால், 20 ஆண்டுகளாக இந்த படையின் பாதுகாப்பில் உள்ள மோடி, ஒருபோதும் விதிமுறை களை மீறியதில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.அமித் ஷா பேச்சின் இடையே குறுக்கிட்ட காங்.,- எம்.பி., கவுரவ் கோகோய், ''மோடி, 2017ல், குஜராத்தில், கடல்விமான பயணத்தின் போது, பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார்,'' என குற்றஞ்சாட்டினார்.அதை மறுத்த, அமித் ஷா, ''பாதுகாப்பு படையின் சோதனைக்கு பிறகே, மோடி கடல்விமானத்தில் பயணித்தார்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (34+ 71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar periyaar - Chennai,இந்தியா
03-டிச-201919:58:37 IST Report Abuse
Kumar periyaar உலகத்தே மக்கள் பணத்தில் சுத்தியே பாதி கஜானா காலி இப்பொழுது என்ன நீலி கண்ணீரா சிறந்த நடிகர் பட்டம் தான் தாரணம் உங்களுக்கு
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
03-டிச-201912:55:19 IST Report Abuse
Malick Raja நாட்டிலே மக்கள் சுபிட்சமாக சந்தோசமாக இருப்பதும்.. நாட்டின் வளர்ச்சி உச்சத்தில் இருப்பதும்.. உலகத்தரத்தில் முதல் வல்லரசாக இருப்பது அனைத்திற்கும் மேலாக ஒரு ரூபாய்க்கு 9. U$. மதிப்பிலிருப்பதும் ஒரு நல்ல கனவாக மோடிஜிக்கு இருப்பதும் உலகமே அறிந்த ஒன்று. ஆனால் நிலைமை முற்றிலுமாக தலைகீழாக கூட இல்லாமல் அதல பாதாளத்தில் இருப்பதும் உலகறிந்த ஒன்றுதான்
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
29-நவ-201919:47:46 IST Report Abuse
Nathan சுப்பண்ணாக்கள் அப்பிடின்னாலும் குதிக்கும், இப்படின்னாலும் குதிக்கும். வெளிநாட்டு முதலீடு, நட்புறவு , பாதுகாப்பு கூட்டு முயற்சியெல்லாம் இந்த குருடுகளுக்கு தெரியாது, கொம்மித்தனமா விமான செலவு இத்தினி னு கணக்கு சொல்லும் இவை , நாப்பது பேர்வரை குடுமத்தோட உலகம் சுற்றின தூங்கப்பாக்களை சொல்லாது, 2 வருஷத்திலே 500 பாரின் ற்றிப்படிச்ச பப்புக்களை அவுங்க பணம் ( இவுங்க பணம்?) . உழைப்பாளி, நேர்மை வாதி மோடி ன்ன ஒயிக, பிரியாணி , கைப்பணம் அங்க ரெடி. மஹாராஷ்டிரா கெடச்ச சான்சுல உரிய போறாங்க SS, NCP, sooni, அப்பவும் மோடி ஒயிக .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X