கோல்கட்டா : மேற்கு வங்கத்தில் நடந்த மூன்று சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், ஆளும் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, கலியாகஞ்ச், கரீம்பூர், காரக்பூர் சதார் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு, சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்தது. தேர்தல் பிரசாரத்தின் போதும், ஓட்டுப் பதிவின் போதும், திரிணமுல் கட்சியினருக்கும், பா.ஜ.,வினருக்கும் இடையே பல இடங்களில் மோதல் ஏற்பட்டது. கரீம்பூர் பா.ஜ., வேட்பாளர், திரிணமுல் கட்சியினரால் தாக்கப்பட்டார்.
பாடம் புகட்டினர்
இந்நிலையில், இந்த மூன்று தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், மூன்று தொகுதிகளிலுமே ஆளும் கட்சியான திரிணமுல் காங்., வெற்றி பெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பா.ஜ.,வால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இது குறித்து, முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:இந்த வெற்றியை, மேற்கு வங்க மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். பா.ஜ., தலைவர்களின் அகம்பாவத்துக்கு, மேற்கு வங்க மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர், தங்களை பலப்படுத்துவதற்கு பதிலாக, மறைமுகமாக பா.ஜ.,வுக்கு உதவினர். அவர்களுக்கும், மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். 3,000 ஓட்டுகள்முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தரகண்டில், பித்ரோகார்க் சட்டசபை தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில், பா.ஜ., வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில், காங்., வேட்பாளரை விட, பா.ஜ., வேட்பாளர், 3,000 ஓட்டுகள் கூடுதலாக பெற்று, வெற்றி பெற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE