அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை சென்னை வருகிறார் பா.ஜ., செயல் தலைவர் நட்டா

Added : நவ 28, 2019
Advertisement
 நாளை சென்னை வருகிறார்  பா.ஜ., செயல் தலைவர் நட்டா

சென்னை :பா.ஜ., தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, நாளை தமிழகம் வருகிறார். மாவட்ட அலுவலகங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், கட்சி நிர்வாகிகளுடன், மாநில தலைவர் நியமனம் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், சொந்தமாக அலுவலகம் அமைக்க, தமிழக பா.ஜ., முடிவு செய்துள்ளது. முதற் கட்டமாக, 15 மாவட்டங்களில் அலுவலகம் அமைக்கப்படுகிறது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நாளை காலை, திருவள்ளூர் மாவட்டம், மணவாள நகரில் நடக்க உள்ளது. அதில் பங்கேற்பதற்காக, பா.ஜ., தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, சென்னை வருகிறார்.அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க, தமிழக பா.ஜ., முடிவு செய்து உள்ளது. விமான நிலையத்திலிருந்து, திருவள்ளூர் செல்லும் நட்டா, திருவள்ளூர் மாவட்டம் உட்பட, 15 மாவட்டங்களில், பா.ஜ., அலுவலகம் கட்ட, அடிக்கல் நாட்டுகிறார். அந்த விழா முடிந்ததும், கட்சியின் முக்கிய பிரமுகர்களை, நட்டா சந்திக்கிறார்; மாநில நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்கிறார். கூட்டத்தில், மாநில தலைவர் நியமனம், உள்ளாட்சி தேர்தல் போன்றவை குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளது. இது குறித்து, கட்சியின் மாநில செயலர் கரு.நாகராஜன் கூறியதாவது:அனைத்து மாவட்டங்களிலும், ஒரே வடிவமைப்பில், பா.ஜ., அலுவலகம் கட்டப்பட உள்ளது. முதல் கட்டமாக, 15 மாவட்டங்களில் அலுவலகம் கட்ட, நாளை அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது. விழாவிற்கு வரும், தேசிய செயல் தலைவரை, முக்கிய பிரமுகர்கள் சந்திக்க உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.கூட்டணியில் மாற்றமா?சென்னையில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்தில், தி.மு.க., மற்றும் சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், மாநில பொதுச்செயலர் வானதி சீனிவாசன் தலைமையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.

அப்போது, வானதி சீனிவாசன் கூறியதாவது:மாநில தலைவரை, தேசிய தலைமை அறிவிக்கும். குறிப்பிட்ட காலத்தில் அறிவிக்கப்பட வேண்டும் என்று கட்டாயம் இல்லை. உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து, தற்போது எதுவும் சொல்ல இயலாது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது; அதில், பா.ஜ.,வும் உள்ளது. வருங்காலத்தில், இதே கூட்டணி தொடரும் என்று, அரசியலில் யாராலும் கூற முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X