அரசியல் செய்தி

தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டம்: இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் இ.பி.எஸ்.

Added : நவ 28, 2019
Advertisement
 செங்கல்பட்டு மாவட்டம்:  இன்று துவக்கி வைக்கிறார் முதல்வர் இ.பி.எஸ்.

சென்னை :தமிழகத்தின், 37வது மாவட்டமாக, செங்கல்பட்டு மாவட்டத்தை, முதல் வர் இ.பி.எஸ்., இன்று துவக்கி வைக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை, நவம்பர், 12ல் வெளியிடப்பட்டது. புதிய செங்கல்பட்டு மாவட்டத்தின் துவக்க விழா, இன்று பகல், 12:15க்கு, செங்கல்பட்டு அடுத்த, வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள, அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் நடக்க உள்ளது.

முதல்வர் இ.பி.எஸ்., புதிய செங்கல்பட்டு மாவட்டத்தை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். புதிய செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை விமான நிலையமும், தாம்பரம், செங்கல்பட்டு என, முக்கிய ரயில் சந்திப்பு களும் அமைந்துள்ளன. சென்னை புறநகர் பஸ் நிலையமும், இந்த மாவட்டத்தில் தான் அமைய உள்ளது. சென்னைக்கு நிகராக வளர்ச்சி பெறும் மாவட்டமாக, செங்கல்பட்டு உருவெடுத்துள்ளது.இம்மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் என, மூன்று கோட்டங்களும், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வண்டலுார் என, எட்டு தாலுகாக்களும் உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகரான, கந்தசாமி கோவில் உள்ளது.

திருப்போரூர் தாலுகாவில், திருப்போரூர், கேளம்பாக்கம், கானாத்துார், ரெட்டிக்குப்பம், மானாம்பதி, காயார் என, ஆறு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இவற்றில், ஆண்டுக்கு, 3,500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின்றன. எனவே, திருப்போரூரில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் திறக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான அறிவிப்பை, புதிய மாவட்டம் துவக்க விழாவில், முதல்வர் வெளியிட வேண்டும் என்பது, திருப்போரூர் மக்களின் எதிர்பார்ப்பு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X