பொது செய்தி

தமிழ்நாடு

5 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை,:சென்னை, தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை மேலாளரை மிரட்டிய வழக்கில், வழக்கறிஞர் தொழில் செய்ய, ஐந்து வழக்கறிஞர்களுக்கு தடை விதித்து, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் சி.ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.போலி நகை விற்பதாக கூறி, 1 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக சிலர் மீது, சரவணா ஸ்டோர்ஸ் எலைட் தங்க நகைக் கடை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பாக, தனசேகர், அதி.மு.க., உறுப்பினர் ஜீவா, வழக்கறிஞர்கள் ஜெகதீசன், அமானுல்லா, ஸ்ரீராம், முருகன், சுந்தரபாண்டிய ராஜா உட்பட ஒன்பது பேரை, தி.நகர் போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், வழக்கறிஞர்கள் ஜெகதீசன், அமானுல்லா, ஸ்ரீராம், முருகன், சுந்தர பாண்டியராஜா ஆகியோர், வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதித்து, பார் கவுன்சில் செயலர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X