பொது செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் கோளாறு: தப்பினர் பயணியர்

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை, டில்லியிலிருந்து, சென்னை வந்த விமானத்தில், திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால், அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில், அவசரமாக தரையிறக்கப்பட்டது.டில்லியில் இருந்து நேற்று காலை, ௧௧௨ பயணியருடன் சென்னை புறப்பட்ட, 'ஏர் ஏசியா' விமானம், ௭:௩௦ மணி அளவில், சென்னையை நெருங்கியது. அப்போது, விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.உடன், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையான, ஏ.டி.சி.,க்கு, பைலட் தகவல் கொடுத்தார்.

விமான நிலையத்தில், விமானம் அவசரமாக தரையிறங்க, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. ஏ.டி.சி., உத்தரவின்படி, 'ஏர் ஏசியா' விமானம், காலை, 8:01 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பைலட்டின் சாதுர்ய நடவடிக்கையால், 112 பயணியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்த சம்பவத்தால், சென்னை விமான நிலையத்தில், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X