கோர்ட் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் கொலை வழக்கு: குற்றவாளியை துாக்கிலிட தடை

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை :கோவையில், பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த மனோகரனை துாக்கிலிடும்படி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த, 2010ல், கோவையில், முஸ்கான் என்ற, 10 வயது சிறுமியும், ரித்திக் என்ற, 7 வயது சிறுவனும், கடத்தி கொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள், பொள்ளாச்சி அருகே கண்டெடுக்கப்பட்டன.

விசாரணையில், சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதும், சிறுவன் ரித்திக் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில், பள்ளியில் ஏற்கனவே டிரைவராக பணியாற்றிய மோகன்ராஜ், அவரது நண்பர் மனோகரன் இருவரும் கைது செய்யப்பட்டனர். கைதான இருவரையும், குற்றம் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றபோது, தப்பி செல்ல முயன்றதாக, மோகன்ராஜ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு, துாக்கு தண்டனை விதித்து, கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.இந்த தண்டனையை, உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன. இதையடுத்து, டிசம்பர், 2ல், மனோகரனை துாக்கிலிட, கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம், இம்மாதம், 18ம் தேதி, வாரன்ட் பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, மனோகரன் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கவர்னருக்கு கருணை மனு அனுப்ப, ஆறு வாரம் அவகாசம் கோரி, தமிழக அரசுக்கும், சிறைத் துறைக்கும் மனு அளிக்கப்பட்டது.இருந்தும், அவகாசம் வழங்காமல், துாக்கு தண்டனையை நிறைவேற்ற, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.மனுவை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின், மனோகரனை துாக்கிலிடும்படி, கோவை மகளிர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தர வுக்கு, நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X