கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., சொத்துக்களின் நிர்வாகி யார்?: விரைவில் தீர்ப்பு வழங்க கோரிக்கை

Added : நவ 28, 2019
Advertisement


சென்னை: 'ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கில், விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்' என, ஜெ., அண்ணன் மகள் தீபா தரப்பில் முன் வைக்கப்பட்ட வேண்டுகோளை பரிசீலிப்பதாக, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்க கோரி, சென்னையை சேர்ந்த புகழேந்தி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கில், ஜெயலலிதாவின் உறவினர்களான, ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அவர்கள், நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும், வருமான வரி நிலுவை, 40 கோடி ரூபாய் உள்ளதாக, வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள், என்.கிருபாகரன், அப்துல்குத்துாஸ் அமர்வு தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில், நீதிபதி என்.கிருபாகரன் அறையில், தீபா தரப்பு வழக்கறிஞர் நேற்று ஆஜரானார். அப்போது, 'டிச., 5ல், ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் வருகிறது. அப்போது, போயஸ் தோட்ட இல்லத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும். அதனால், அதற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்வதாக, நீதிபதி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X