அரசியல் செய்தி

தமிழ்நாடு

3ம் நிலை நகராட்சிகளை அகற்றி அவசர சட்டம் பிறப்பித்தது அரசு

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை,:தமிழகத்தில் உள்ள நகராட்சிகள் அனைத்தும், தரம் உயர்த்தப்பட்டதால், தற்போது மூன்றாம் நிலை நகராட்சிகள் இல்லை என, நகராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்து, அவசர சட்டம்பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 49 மூன்றாம் நிலை நகராட்சிகள் இருந்தன. இவற்றில், 12 நகராட்சிகள், திருப்பூர், ஈரோடு, வேலுார் மாநகராட்சி விரிவாக்கத்தின் போது, மாற்றம் செய்யப்பட்டன. மீதமிருந்த மூன்றாம் நிலை நகராட்சிகளில், 36 நகராட்சிகள், பல்வேறு காலகட்டங்களில், தரம் உயர்த்தப்பட்டன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருந்த, மேல் விஷாரம் மூன்றாம் நிலை நகராட்சி, கடைசியாக இரண்டாம் நிலை நகராட்சியாக, தரம் உயர்த்தப்பட்டது.பத்து கோடி ரூபாய்க்கு மேல், ஆண்டு வருமானம் உள்ள நகராட்சிகள், சிறப்பு நிலை நகராட்சிகளாகவும், 6 கோடி முதல், 10 கோடி ரூபாய் வருவாய் உள்ள நகராட்சிகள், தேர்வு நிலை நகராட்சிகளாகவும், 4 கோடி முதல், 6 கோடி ரூபாய் வரை வருமானம் உள்ள நகராட்சிகள், முதல் நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப் படுகின்றன. நான்கு கோடி ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ள நகராட்சிகள், இரண்டாம் நிலை நகராட்சிகளாக உள்ளன. தற்போதைய நிலையில், மாநிலத்தில் மூன்றாம் நிலை நகராட்சிகள் எதுவும் இல்லை.தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தில், மூன்றாம் நிலை நகராட்சிகளுக்கான பிரிவுகள் தேவையற்றதாக உள்ளதால், அவற்றை நீக்கம் செய்து, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார். இந்த திருத்த சட்டப்படி, நகராட்சி சட்டத்தில் உள்ள, மூன்றாம் நிலை நகராட்சிகள் என்பதற்கு பதிலாக, பேரூராட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.ஊரக தேர்தலுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம்உள்ளாட்சி தேர்தலில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், பிரதிநிதிகளை தேர்வு செய்ய, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி போன்றவற்றின் பிரதிநிதிகளை தேர்வு செய்ய, பழைய முறைப்படி ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவது போல, ஊரகப் பகுதிகளில் உள்ள, உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலிலும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்பயன்படுத்த அனுமதி அளித்து, அவசர சட்டம்பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சட்டம், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர் ஆகியோரை தேர்வு செய்ய, ஓட்டுச்சீட்டுக்கு பதிலாக, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த, வழிவகை செய்துள்ளது.

இது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் செயலர் சுப்பிரமணியன் கூறுகையில்,''வரும் உள்ளாட்சி தேர்தலில், பரிசோதனை அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும், ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில், ஓட்டுச்சீட்டுக்கு பதிலாக, ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்காகவே, சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X