அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக உள்ளன: ஜிதேந்திர சிங்

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 அணுமின் நிலையங்கள், பாதுகாப்பு, ஜிதேந்திர சிங்

புதுடில்லி: 'ராஜ்யசபாவில் பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான இணை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான ஜிதேந்திர சிங் கூறியதாவது:தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கம்ப்யூட்டர் களுக்குள் ஊடுருவி, வைரஸ் தாக்குதல்நடத்தி, மர்ம நபர்கள் தகவல்களை திருடியதாக, சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து, நாட்டில் உள்ள எல்லா அணுமின் நிலையங்களிலும், போதிய பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
தற்போது நாட்டில் உள்ள எல்லா அணுமின் நிலையங்களும் பாதுகாப்பாக உள்ளன. அணுமின் நிலையங்களை பொறுத்தவரை, முதலில் பாதுகாப்பு, அப்புறம் உற்பத்தி என்ற கொள்கையை, அரசு பின்பற்றி வருகிறது. அணுமின் நிலையத்தின் அணு உலை கட்டுப்பாட்டு நடைமுறை, 'இன்டர்நெட்' உள்ளிட்ட, எந்த ஒரு வெளி நெட்ஒர்க்குடனும் இணைக்கப்படவில்லை. எனவே, அணு உலை தொடர்பான விஷயங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

அணுமின் நிலையங்களில், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, இணைய பாதுகாப்பு தொடர்பான தணிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதல்களை கட்டுப்படுத்த, ஐ.ஐ.டி., இயக்குனர்கள் உள்ளிட்ட குழு அமைக்கப் பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு ஆய்வு, நெட்ஒர்க் க்ளீனீங், 'இ - மெயில்'களை ஸ்கேன் செய்யும் நடவடிக்கை, புள்ளி விபர பாதுகாப்பு, இணைய கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
29-நவ-201906:54:48 IST Report Abuse
Nalam Virumbi Special Cover and Postal Stamp issued by postal department on occasion of world record of 962 days of continues operation of our Kaiga Nuclear Power Plant.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
28-நவ-201923:11:18 IST Report Abuse
Ramakrishnan Natesan பார்த்து நீங்க பாதுகாப்பா இருக்கீங்களா என் எனில் வங்காளத்தில் பாஜக வேட்பாளர் பிரேமசந்திர ஜாவை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீப் சர்க்கார் போட்டியிட்டார். இதில் பிரேமசந்திர ஜாவைக் காட்டிலும் 20 ஆயிரத்து 811 வாக்குகள் கூடுதலாகப் பெற்று பிரதீப் சர்க்கார் வெற்றி பெற்றார். கராக்பூரில் பாஜகவுக்கு கிடைத்த தோல்வி என்பது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகும். தன் கைவசம் வைத்திருந்த ஒரு எம்எல்ஏ தொகுதியை பாஜக இழந்துவிட்டடது. மூன்றாவது தொகுதியான கரிம்பூரில் பாஜக வேட்பாளர் ஜெய்பிரகாஷ் மஜூம்தாரைக் காட்டிலும் 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் பிமாலென்டு சின்ஹா ராய் முன்னிலை வகித்த நிலையில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மேற்கு வங்கத்தில் முதல் முறையாக கலியகஞ்ச் மற்றும் கரக்பூர் தொகுதிகளை திரிணமூல் காங்கிரஸ் முதல் முறையாகக் கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - BANGALORE,,இந்தியா
28-நவ-201922:54:18 IST Report Abuse
Ramakrishnan Natesan இதை என் வைத்துள்ளேர்கள் இதையும் விற்றுவிடுங்கள் போவதற்குள் மந்திரிகள் போட்டி போடு கொண்டு தங்கள் இலாகாவில் உள்ளவற்றை விற்று மைதானம் ஆகி விடுங்கள் அந்த வெளியூர் கரன் வந்து எங்கள் பெயரை மாற்றி விடுவான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X