கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இன்ஸ்பெக்டருக்கு தண்டனை ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 28, 2019
Advertisement

மதுரை, பெண் தற்கொலை வழக்கில், இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவனுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உயர்நீதிமன்றம்மதுரைக் கிளை ரத்து செய்தது. கோவை கம்ப்யூட்டர்மென்பொறியாளர் அகிலா. சென்னையில் ஒரு நிறுவனத்தில் மனிதவளப் பிரிவில் பணிபுரிந்தார். இவர் சிலரிடம் பணம் பெற்று, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக 2007ல் தஞ்சாவூர் எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டது. அப்போதைய தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் விசாரித்தார். தனியார் விடுதியில் 2007 நவ.,19ல் அகிலா துாக்கில் பிணமாக தொங்கினார். அகிலா அவரது தாய்க்கு எழுதிய கடிதத்தில்,'மரணத்திற்கு சேதுமணி மாதவன் உட்பட சிலர்தான் காரணம்,' என குறிப்பிட்டார்.குற்றச்சதி, சட்டத்திற்கு புறம்பாக தடுத்து வைத்தல், தற்கொலைக்கு துாண்டுதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் சேதுமணி மாதவன் மீது சி.பி.சி.ஐ.டி.,போலீசார் 2007 ல் வழக்குப் பதிந்தனர்.சேதுமணி மாதவனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் மகளிர் விரைவு நீதிமன்றம் 2017 மார்ச் 20 ல் உத்தரவிட்டது. இதை ரத்து செய்யக்கோரி சேதுமணி மாதவன் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.நீதிபதி வி.பார்த்திபன்,'மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. குற்றச்சாட்டுகளிலிருந்து மனுதாரர் விடுவிக்கப்படுகிறார்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X