கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மணலை பாதுகாக்க விதிமுறைகள் தேவை உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 28, 2019
Advertisement

மதுரை, அறிவியல் தொழில்நுட்ப முறைப்படி மணல் குவாரி நடத்த மற்றும் மணலை பாதுகாக்கும் விதிமுறைகளை தமிழக அரசு 6 மாதங்களில் உருவாக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மணிகண்டன் தாக்கல் செய்த மனு:புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாறு, அக்னி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் திருட்டு நடக்கிறது. அவற்றை தடுக்க டோல்கேட்டுகளில் சரியான கட்டமைப்பு வசதி இல்லை. வாகனங்கள் மூலம் சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க அனைத்து முக்கிய ரோடுகளில், குறிப்பிட்ட இடைவெளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.இன்டர்நெட் மூலம் கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மணிகண்டன் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு உத்தரவு:மணல் குவாரிகளை கண்காணிக்க, சட்டவிரோத மணல் கடத்தலை தடுக்க மாவட்ட, தாலுகா அளவில் உயர்நிலை கண்காணிப்புக் குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. அதில் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் கூடுதலாக அதிகாரிகள் இடம்பெறும் வகையில் குழுவை மாற்றியமைக்க வேண்டும். அவர்களுக்கு பொறுப்புகளை நிர்ணயிக்க வேண்டும்.மணலை அத்தியாவசிய தேவையாக கருதி, அதன் விலையை கட்டுப்படுத்தும் நடைமுறையை உருவாக்க வேண்டும். கட்டட வரைபட அனுமதி அடிப்படையில் அதன் பரப்பளவை கணக்கில் கொண்டு, தேவையான அளவு மணலை வழங்க வேண்டும். மாற்று ('எம்' சாண்ட்)மணலைப் போல், ஆற்று மணலை வீடுகளில் நேரடியாக வினியோகிப்பது குறித்து பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். அறிவியல் தொழில்நுட்ப முறைப்படி மணல் குவாரி நடத்த மற்றும் மணலை பாதுகாக்கும் விதிமுறைகளை தமிழக அரசு 6 மாதங்களில் உருவாக்க வேண்டும் என்றனர்.மதுரை சமூகநீதிப் பேரவை செயலாளர் இருளாண்டி,'விவசாயம், குடிநீர், சுற்றுச்சூழலை பாதுகாக்க மணல் குவாரிகளை தடை செய்து, மணலுக்கு கேரளாபோல் மாற்றுவழி (கிரஷர் துாசி) கண்டறிய வேண்டும். தமிழக ஆறுகளில் மணல் குவாரிகளை தடை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,' என மனு செய்தார். நீதிபதிகள், 'தகுதி அடிப்படையில் இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்கிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X