பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர்கள் 'ஸ்டிரைக்' பக்தர்கள் பாதிப்பு பழநி முருகன் கோயிலில்

Added : நவ 28, 2019
Advertisement

பழநி, :பழநி முருகன்கோயில் முடி காணிக்கை டிக்கெட் விற்பனையில் ஊழல் நடப்பதாக புகார் தெரிவித்து, சிகைத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ததால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.திருப்பதிக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் அதிகளவில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துகின்றனர். முடிஎடுக்க ஒரு நபருக்கு ரூ.30 கட்டணம் வசூலிக்கின்றனர். அதில் ரூ.5 கோயிலுக்கும், ரூ.25 தொழிலாளர்களுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.இந்நிலையில் சலுான்களில் மொட்டையடித்து தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் டிக்கெட் பணம் ரூ.30 வசூலிக்கப்படுகிறது. அதில் பங்குதராமல் செக்யூரிட்டிகள், அலுவலர்கள் மோசடி செய்கின்றனர் என முடிகாணிக்கை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். கோயில் துணை ஆணையர் (பொ) செந்தில்குமார் சமரசம் செய்தார். முறைகேடை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதன்பின் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். இதனால் முடிகாணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் நீண்டநேரம் காத்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X