நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராக உத்தரவு

Added : நவ 28, 2019

மதுரை ;சென்னை கோபாலபுரம் மாணவர் ரிஷிகாந்த் 19, அவரது தந்தை ரவிகுமார் 61. இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 'நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் எங்களை சந்தேகத்தின்பேரில் விசாரணைக்கு அழைக்கின்றனர். எங்களை கைது செய்யவார்களோ என அச்சப்படுகிறோம். முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என செய்தனர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.அரசுத் தரப்பில், 'ரிஷிகாந்தின் தற்போதைய விரல் ரேகை மற்றும் தேர்வின்போது பதிவான ரேகையை நிபுணர்கள் ஒப்பீடு செய்தனர். இதில் மாறுபாடு உள்ளது,' என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து 'சி.பி.சி.ஐ.டி., விசாரணை அதிகாரி முன் இன்று (நவ.,29) காலை 10:30 மணிக்கு ரவிக்குமார் ஆஜராக வேண்டும். மனுதாரர்கள் இருவரையும் கைது செய்யக்கூடாது என ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு இன்று வரை நீட்டிக்கப்படுகிறது,' என உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X