பொது செய்தி

தமிழ்நாடு

காவலாளி சம்பளம் உயர்வு அறநிலைத்துறை உத்தரவு

Added : நவ 28, 2019
Advertisement

மதுரை :தமிழக கோயில்களில் தனியார் நிறுவன காவலாளிகளுக்கு டிச.,1 முதல் சம்பள உயர்வு வழங்கி அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் கோயில்களின் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள்கூட்டத்தை சரிசெய்தல்,நெரிசலை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம் 67 முதல் 120 காவலாளிகளை அந்தந்த கோயில் நிர்வாகங்கள் நியமித்து வருகிறது.இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.276 சம்பளம் நிர்ணயம் செய்து டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரருக்கு கோயில் நிர்வாகம் வழங்குகிறது.விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சம்பளம் இல்லாததால் காவலாளிகள் கிடைப்பது கடினமாக இருந்தது. இதையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம், காவலாளி மாத சம்பளம் ரூ.10 ஆயிரத்து 385 நிர்ணயம் செய்து டெண்டர் கோரியது. நாக்ஸ் எனும் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது. இதன்படி டிச., 1 முதல் காவலாளிக்கு பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பிடித்தம் செய்து புதிய சம்பளம் வழங்கப்படும். பிற கோயில்களிலும் காவலாளிகளுக்கு சம்பள உயர்வு வழங்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X