சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

8 வயது முதல் சென்னையில் தனியாக வசித்தேன்!

Updated : நவ 28, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
தன்னைப் பற்றி கூறுகிறார் நடிகை அமலா: பிறந்தது, உ.பி.,யின் கரக்பூர். அப்பா, கடற்படை அதிகாரி. அதனால், பல மாநிலங்களில் வளர்ந்தேன். சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பம் எங்களுடையது. 6 வயதாக இருந்த போது, பெங்களூரில், பத்மா சுப்ரமணியத்தின் நடன நிகழ்ச்சியை கண்டேன்.அது முதல், நடனத்தில் ஈடுபாடு அதிகரித்து விட்டது. நடன பள்ளியில் சேர்ந்து நடனம் கற்றேன். நடனத் திறமையை
 8 வயது முதல் சென்னையில் தனியாக வசித்தேன்!

தன்னைப் பற்றி கூறுகிறார் நடிகை அமலா: பிறந்தது, உ.பி.,யின் கரக்பூர். அப்பா, கடற்படை அதிகாரி. அதனால், பல மாநிலங்களில் வளர்ந்தேன். சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத குடும்பம் எங்களுடையது. 6 வயதாக இருந்த போது, பெங்களூரில், பத்மா சுப்ரமணியத்தின் நடன நிகழ்ச்சியை கண்டேன்.அது முதல், நடனத்தில் ஈடுபாடு அதிகரித்து விட்டது. நடன பள்ளியில் சேர்ந்து நடனம் கற்றேன்.

நடனத் திறமையை மெருகேற்றிக் கொள்ள, சென்னை, பெசன்ட் நகர் கலாஷேத்ராவில் பயிற்சி எடுக்க வந்தேன். அப்போது எனக்கு வயது, 8. அம்மா வெளியூரில் இருக்க, நான் மட்டும் தனியாக, சென்னையில், ஹாஸ்டலில் வசிக்கத் துவங்கினேன்.கலாஷேத்ராவில் கல்லுாரி படிப்பு வரை படித்தேன். நடனம் கற்றபடியே, பல நகரங்களில், நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன்.அப்போது, அம்மா அயர்லாந்தில் இருந்தாங்க; அப்பா, வேறொரு பெண்ணை கல்யாணம் செய்து, தனியாக போயிட்டாங்க. நான் மட்டும் தனியாக, சென்னையில் நடனம் ஆடிக் கொண்டிருந்தேன்; போதிய வருமானம் இல்லை. அப்போது ஒரு நாள், இயக்குனர் டி.ராஜேந்தர், என் நடனத்தை பார்த்தார். அதுவரை, ஒரு தமிழ் படம் கூட நான் பார்த்ததில்லை; ஐயங்கார் பாஷையில் தான் தமிழ் பேசுவேன்.'படத்தில் நடிக்க வாரியா'ன்னு, ராஜேந்தர் கேட்டார். 'எனக்கு நடிக்கத் தெரியாது' என்றேன். 'அது தான் எனக்கு வேண்டும்' என்று கூறி, மைதிலி என்னைக் காதலி படத்தின் நாயகியாக நடிக்க வைத்தார்.முதல் படமே பயங்கர, 'ஹிட்!' தொடர்ந்து பல படங்களில், 'புக்' ஆனேன். இரவு, பகலாக நடித்தேன். பிரபலமான இயக்குனர்கள், நாயகர்கள் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 23 வயதில் நான் சம்பாதித்த பணத்தில், அடையாறில், அம்மாவுக்கு வீடு ஒன்றை, சொந்தமாக வாங்கி விட்டேன்.தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில், முன்னணி நடிகர்களுடன், பல படங்களில் நடித்துள்ளேன்.

அப்படித் தான், தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வரும் நாகார்ஜுனாவுடன், பல படங்களில் நடித்தேன். முதலில் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டு, காதலாக மாறியது. சினிமாவில் நடிக்க வந்தது போல, திருமணம் முடிவும் என்னுடையது தான். நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டதன் மூலம், பாரம்பரியம் மிக்க, சினிமா குடும்பத்தின் மருமகளாகி விட்டேன்.என் மகன் அகில், கணவர் மற்றும் நான், ஒரே வீட்டில் வசிக்கிறோம். என் கணவர் முதல் மனைவியின் மகன் நாக சைதன்யா, அவர் மனைவி சமந்தாவுடன், வேறொருவீட்டில் வசிக்கிறார். சினிமா தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது. கண்ட கனவை விடவும், மிகவும் சிறப்பான வாழ்க்கை எனக்கு அமைந்துள்ளது!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeraraghavan Jagannathan - Tiruchirappalli,இந்தியா
29-நவ-201915:57:03 IST Report Abuse
Veeraraghavan Jagannathan கடைசி இரண்டு வரி ஒரே குழப்பமா இருக்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X