பார்லி.,யில் நேற்று

Added : நவ 28, 2019
Advertisement

11.56 லட்சம் பிளாட்பார வியாபாரிகள்

லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் 'நாடு முழுவதும் 11.56 லட்சம் பிளாட்பார வியாபாரிகள் இருப்பதாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எடுத்துள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது' என மத்திய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.


அயோத்தியில்விமான நிலையம்



'அயோத்தியில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் உத்தர பிரதேச அரசு பேசி வருகிறது. இது தொடர்பான அறிக்கையை கேட்டுள்ளோம்' என லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

1,500 குழந்தை திருமணம்

'கடந்த 2013 - 2017 காலத்தில் நாடு முழுவதும் 1500க்கு மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் நடந்ததாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.' ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதை தெரிவித்தார்.


அங்கன்வாடி உயர்த்தப்படாது



ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளதாவது : நாடு முழுவதும் 13.99 லட்சம் அங்கன்வாடி மையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதில் 13.77 லட்சம் மையங்கள் இயங்கி வருகின்றன. இந்த எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை. அதேபோல் அங்கன்வாடி பணியாளர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்துவது குறித்தும் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.


கட்டண உயர்வு ஏன்



சி.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய கல்வி வாரியம் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கான கட்டணத்தை அடுத்த ஆண்டில் இருந்து 750 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தியுள்ளது. இது குறித்து ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. 'இந்தக் கட்டண உயர்வு லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை என்ற அடிப்படையில் தான் செய்யப்பட்டுள்ளது' என மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதில் அளித்துள்ளார்.


விரைவாக விசாரிக்க கோரிக்கை



டாடா அறக்கட்டளை தாக்கல் செய்துள்ள அறிக்கையில் '2016ம் ஆண்டு கணக்கின்படி சிறையில் உள்ள கைதிகளில் 67.7 சதவீதம் பேர் விசாரணை கைதிகள்' என தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அளித்த பதிலில் 'வழக்கில் கிடைக்கக் கூடிய தண்டனையில் 50 சதவீதம் கழித்த விசாரணைக் கைதிகள் குறித்த வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும் என 25 உயர் நீதிமன்றங்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன' என சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X