கிளப்புறாங்கய்யா...!

Added : நவ 28, 2019
Advertisement

ஏ.டி.எம்.,மில் படம் எடுத்த பாம்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் நகரில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றவர் அரண்டு ஓடினார். காரணம் ஏ.டி.எம். மையத்தில் வாயை பிளந்தபடி சீற்றத்துடன் ஒரு பெரிய மலை பாம்பு இருந்தது. பாம்பை பார்க்க மக்கள் படையெடுத்தபோது பாம்பு மேலும் சீற்றமடைந்தது. கடைசியில் பாம்பு பிடிப்பவர் வரவழைக்கப்பட்டு பத்திரமாக மீட்டு சென்றார். இந்த வீடியோவை அப்பகுதி மக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

அலைபேசிக்கு பதில் கோழிக்குஞ்சு

இந்தோனேசியா அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கோழிக்குஞ்சு ஒன்றை வழங்கி உள்ளது. அைலபேசியை பயன்படுத்தும் நேரத்தை கோழிக்குஞ்சுகளுடன் மாணவர்கள் செலவிட அறிவுறுத்தியுள்ளது. காலை மாலையில் தீனி இடுவது பராமரிப்பது போன்ற செயல்களை தினசரி அட்டவணைப்படுத்த வேண்டுமாம். வீட்டில் வளர்க்க முடியாதவர்கள் பள்ளியில் வைத்து வளர்க்கலாம். இதன்மூலம் அலைபேசியில் இருந்து விடுபட்டு மனம் உடல் ரீதியாக நலமுடன் இருக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவிக்க பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

டிராபிக்கை சமாளிக்க ஒரே வழி

இந்தோனேஷியா நாட்டில் தினசரி போக்குவரத்து நெரிசலை வெறுத்த ஜூஜூன் என்பவர் இதை சமாளிக்க ஹெலிகாப்டர் ஒன்றை வீட்டிலேயே தயாரித்துள்ளார். பெட்ரோல் மூலம் இயங்கும் 8 மீ. நீளமுள்ள ஹெலிகாப்டரை இந்திய மதிப்பில் 1.52 லட்சம் ரூபாய் செலவில் தயாரித்துள்ளார். 18 மாத உழைப்பில் உருவான இதை இன்னும் பறக்க எடுத்து சென்று சோதிக்கவில்லையாம். இருப்பினும் இறுதிகட்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் வலைதளங்களில் பதிவிட ஏகப்பட்ட 'கமெண்ட்' குவிந்து வருகிறது.

மான் வயிற்றில் பிளாஸ்டிக்!

தாய்லாந்து நாட்டில் குன் சதான் தேசிய பூங்காவில் 10 வயது காட்டுமான் இறந்து கிடப்பதை பூங்கா அதிகாரிகள் பார்த்து உள்ளனர். பரிசோதனையில் அதன் வயிற்றில் 7 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. மான் இறப்பதற்கு முன்பு வரை பிளாஸ்டிக்கை மட்டும் உணவாக உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இப்படங்கள் வலைதளங்களில் கசிய 'நெட்டிசன்'களும் விலங்கின ஆர்வலர்களும் கொந்தளித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X