சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலம் வாங்கித்தருவதாக ரூ.30 லட்சம் பறிப்பு ஏழு பேர் கைது

Added : நவ 28, 2019
Advertisement
நிலம் வாங்கித்தருவதாக ரூ.30 லட்சம் பறிப்பு ஏழு பேர் கைது

மூணாறு :மூணாறு அருகே நிலம் வங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சத்தை பறித்துச் சென்ற ஏழு பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் பகுதியைச் சேர்ந்த தீபக் எர்ணாகுளத்தில் கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இவரிடம் மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் நிலம் வாங்கி தருவதாக சிலர் தொடர்பு கொண்டனர்.அதை நம்பி நண்பர் ஒருவருடன் ரூ. 30 லட்சம் முன் பணத்துடன் தீபக் அடிமாலிக்கு வந்தார். அவரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்ற கும்பல் ரூ.30 லட்சத்தை பறித்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டது. தீபக் அடிமாலி போலீசில் புகார் அளித்தார்.அடிமாலி தோக்குபாறையைச் சேர்ந்த மஜித் 38, ஜோமோன் 31, கல்லார்குட்டியைச் சேர்ந்த ராஜேஷ் 31, ஜோஜி 39, பரவூரைச் சேர்ந்த ஜோஸ் 35, திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாசில் 33, களமசேரியைச் சேர்ந்த நவுபால் 44 ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து ரூ.22.25 லட்சத்தை பறிமுதல் செய்தனர். பேசில் 33 என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X