கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக 'மாஜி' அமைச்சரை நியமித்தது ரத்து

Added : நவ 28, 2019
Advertisement

சென்னை, திருவண்ணாமலை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தில் 522 பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக தினமும் 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட சங்க துணைப் பதிவாளர் அந்த மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமித்து இருப்பதாக ஆகஸ்ட் 28ல் அறிவித்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலத்துார் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தை அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடத்தி வருகிறார். அதன் காரணமாக இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாவட்டம் வனபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் பச்சமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவில் 'தேர்தல் நடத்தாமல் மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்க தலைவரை நியமித்தது சங்க விதிகளுக்கு எதிரானது. எனவே அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தலைவராக நியமித்ததை ரத்து செய்ய வேண்டும்' என கோரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் '' கூட்டுறவு சங்க விதிகளை பின்பற்றாமல் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் ரத்து செய்யப்படுகிறது'' என்றார். வழக்கில் மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.ஜெயபிரகாஷ் வாதாடினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X