ஐ.எஸ்., அமைப்பில் இணைந்த கேரள தம்பதி புகைப்படத்தை பார்த்து தாயார் அடையாளம்

Added : நவ 28, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ஐ.எஸ்., அமைப்பில் இணைந்த கேரள தம்பதி புகைப்படத்தை பார்த்து தாயார் அடையாளம்

திருவனந்தபுரம் ஆப்கானிஸ்தானில் சரணடைந்துள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளில் தன் மகளும், மருமகனும் இருப்பதை கேரளாவை சேர்ந்த பெண் உறுதி செய்துள்ளார்.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிந்து சம்பத். இவருக்கு நிமிஷா என்ற மகள் உள்ளார். நிமிஷாவுக்கும் பெக்சின் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்கள் இருவரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்தனர். அதன் பின் நிமிஷா என்ற பெயரை பாத்திமா என்றும் பெக்சின் என்ற பெயரை இஷா என்றும் மாற்றிக் கொண்டனர்.இவர்கள் கேரளாவை சேர்ந்த அப்துல் ரஷீத் என்ற ஐ.எஸ். பயங்கரவாதியுடன் சேர்ந்து தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் சென்றனர். அங்கு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.அங்கு இருந்தபடியே தாயார் பிந்துவுடன் தொலைபேசியில் மகள் நிமிஷா பேசி வந்தார். தன் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படங்களை 'இ - மெயில்' வாயிலாக அனுப்பியுள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் 26ல் கடைசியாக தன் தாயாருடன் நிமிஷா போனில் பேசியுள்ளார். அதன் பின் அவர்களிடம் இருந்து தகவல் எதுவும் இல்லை.இந்நிலையில் பிந்துவை அவரது வீட்டில் சந்தித்த தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் ஆப்கனில் சமீபத்தில் சரணடைந்த சில ஐ.எஸ். பயங்கரவாதிகளின் புகைப்படங்களை காட்டினர். அதில் தனது, மகள் மருமகன் மற்றும் பேரக் குழந்தை இருப்பதை பிந்து உறுதி செய்தார்.கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வசித்து வரும் பெக்சினின் தாயார் கிரேசி தாமஸ் புகைப்படத்தை பார்த்து தனது மகனை அடையாளம் காட்டினார். தங்கள் பிள்ளைகளும் பேரக் குழந்தையுடன் பத்திரமாக தாயகம் திரும்புவர் என இரு தாய்மார்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ
29-நவ-201912:45:22 IST Report Abuse
பெரிய ராசு பெக்சினின் - கிரேசி தாமஸ்-நிமிஷா..பலே தன வினை தன்னை சுடும் ..
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
29-நவ-201904:25:24 IST Report Abuse
Girija அவர்கள் இருவரும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் சேர்ந்ததை மறைத்த இருவரின் பெற்றோர்களுக்கு என்ன தண்டனை ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X