சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

என்ன நடக்குமோ?

Updated : நவ 29, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 என்ன நடக்குமோ?

'இது எங்கு போய் முடியும் என தெரியவில்லையே... வயதான காலத்தில், இது தேவைதானா?' என, கலக்கத்தில் உள்ளார், முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்.

கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததுமே, தீவிர அரசியலில் ஈடுபடுவதை படிப்படியாக தவிர்த்து வந்தார், மன்மோகன் சிங். ஆனாலும், ராஜ்யசபா எம்.பி., என்ற முறையில், அவ்வப்போது பார்லிமென்டிற்கு வந்து சென்றார்.கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்றது. இதையடுத்து, 'இனிமேல் நிம்மதியாக வீட்டில் அமர்ந்து ஓய்வு எடுக்க வேண்டியது தான்' என, நினைத்திருந்தார், மன்மோகன்.

ஆனால், மீண்டும் அவரை ராஜ்யசபா எம்.பி.,யாக்கி, பார்லிமென்டிற்கு வரச் செய்து விட்டது, காங்., மேலிடம்.அத்துடன் விட்டிருந்தாலும் பரவாயில்லை. 'பா.ஜ., அரசின் நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. ஒரு பொருளாதார நிபுணர் என்ற முறையில், நீங்கள் தான், அதை விமர்சிக்க முடியும். பார்லிமென்டிலும், வெளியிலும், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசுங்கள்' என, வற்புறுத்தினர், காங்., தலைவர்கள். மன்மோகன் சிங்கோ, 'எனக்கு, 87 வயதாகி விட்டது. இந்த நேரத்தில், தேவையில்லாமல் விஷப்பரீட்சை எழுதச் சொல்கின்றனரே... என்ன நடக்குமோ' என, புலம்புகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
29-நவ-201912:32:35 IST Report Abuse
karutthu வயது முதிர்வு காரணமாக அரசியலிலிருந்து ஒய்வு பெற்றுகொள்கிரேன் என அறிவித்து விடவேண்டியது தானே ஒருவேளை கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என விருப்பமோ ???
Rate this:
Share this comment
Cancel
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
29-நவ-201901:10:40 IST Report Abuse
S.V.SRINIVASAN மன்மோகன்சிங் அவர்களின் ஆதங்கத்தில் அர்த்தம் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X