பொது செய்தி

தமிழ்நாடு

முதல் ரேங்க் பெறுவதே நோக்கமாக வேண்டும் தினமலர் 'சக்சஸ் மந்த்ரா 2.0 'ல் கல்வியாளர்கள் ஆலோசனை

Added : நவ 28, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தினமலர் சார்பில் நடந்த பிளஸ் 1, 2, மாணவர்களுக்கான 'சக்சஸ் மந்த்ரா' ஜெயித்துக்காட்டுவோம் 2.0 நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். புதிய பாடத் திட்டத்தை எதிர்கொள்ள தேவையான வெற்றி ரகசியங்களை விளக்கிய கல்வியாளர்கள், முதல் ரேங்க் பெறுவதையே நோக்கமாக கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினர்.மாணவர்கள் நலன் கருதி
 முதல் ரேங்க் பெறுவதே நோக்கமாக வேண்டும்   தினமலர் 'சக்சஸ் மந்த்ரா 2.0 'ல் கல்வியாளர்கள் ஆலோசனை

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் தினமலர் சார்பில் நடந்த பிளஸ் 1, 2, மாணவர்களுக்கான 'சக்சஸ் மந்த்ரா' ஜெயித்துக்காட்டுவோம் 2.0 நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். புதிய பாடத் திட்டத்தை எதிர்கொள்ள தேவையான வெற்றி ரகசியங்களை விளக்கிய கல்வியாளர்கள், முதல் ரேங்க் பெறுவதையே நோக்கமாக கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினர்.மாணவர்கள் நலன் கருதி ஜெயித்துக்காட்டுவோம், வழிகாட்டி, உங்களால் முடியும் போன்ற கல்வி நிகழ்ச்சிகளை தினமலர் நடத்தி மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பாரட்டை பெற்று வருகிறது. தற்போது பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தை எளிதாக எதிர் கொள்வது எப்படி என்பதை விரிவாக எடுத்துக்கூறும் 'சக்சஸ் மந்த்ரா' ஜெயித்துக்காட்டுவோம்2.0 நிகழ்ச்சியை கோவை அமிர்தா விஸ்வ வித்யாபீடத்துடன் இணைந்து ராஜபாளையத்தில் நடத்தியது. காலை 9:30 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை 8:30 மணிக்கே மாணவர்கள், பெற்றோர்கள் திரண்டனர்.கல்வியாளர்கள் பேசியதாவது:சைடுல பேசுறது கூடவே கூடாதுசரவணக்குமாரன், கவுரவ இயக்குனர், சன் ஐ.ஏ.எஸ்., அகாடமி, சென்னை: கடைசி பெஞ்ச், முதல் பெஞ்ச், நடுபெஞ்சில் உட்கார்ந்திருந்தாலும் மாணவர்களின் மனம் முதல் ரேங்க் பெறுவதையே நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் முதல் ரேங்க் தான் கெத்து. நேருக்கு நேராக ஆசிரியர்களை சந்தித்து பேச மாணவர்கள் தயக்கம் கொள்ளக்கூடாது. சைடுல பேசுறது, மற்ற மாணவர்களை படிக்கவிடாமல் தடுப்பது போன்ற செயல்களால் யாருக்கும் நன்மை கிடைக்காது. மாணவன் புரணி பேசாமல் அவன் பெயரை பரணி பாட வைக்க வேண்டும். இதனால் மாணவரின் பெற்றோர், ஆசிரியர் மட்டுமல்ல, நாடும் மகிழ்ச்சி அடையும். பெற்றோர், ஆசிரியர்கள் படி படி என கூறுவது எரிச்சல் தரலாம். நீங்கள் பெற்றோராக வரும் போது தான் படிப்பின் அருமை தெரியவரும். வழக்கறிஞராக படிப்பது சிரமம். பயிற்சி செய்வது கடினம். ஆடிட்டர் படிப்பு கடினம். பயிற்சி செய்வது எளிது. எளிதாக வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய முடியாது. பொதுத்தேர்வில் நீங்கள் பெறும் அதிக மதிப்பெண்களால்தான் டாக்டர், இன்ஜினியர் போன்ற உயர் கல்வியுடன் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாக வாழலாம்.தன்னம்பிக்கை தருது உயர்ந்த இடம்:செந்தில்குமார், பேராசிரியர் அமிர்தா விஸ்வ வித்யாபீடம், கோவை: பிளஸ்1, 2, மாணவர்கள் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடைய கடுமையாக போராட வேண்டும். கவனமாக படித்தால் ஈர்ப்பு ஏற்படும். அதிகமான தகவல்களை அறிந்து கொள்ள துாண்டும். அதிகமான தகவல்கள் ஆற்றலாகும். ஆற்றல் அறிவாக மாறும் .அறிவு வெற்றியை தரும். எப்போதும் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுதல் கூடாது. நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் மிக்கவர்கள். தனித்திறன் உடையவர்கள். தன்னம்பிக்கையுடன் முயன்றால் உயர்ந்த இடத்தை பெறலாம். எதைப்பற்றியும் பயம் கொள்ளக்கூடாது. பயம் நம்மை செயல்படவிடாமல் தடுக்கும். தேல்விகள் வெற்றிக்கு அடித்தளமாகும் என்பதால் உற்சாகத்துடன் முயல வேண்டும்.

பகுத்தாயும் திறனை மேம்படுத்தும் பாடத்திட்டம்
எஸ்.சையது அபுதாகீர், தலைமையாசிரியர் சி.பி.யு., மேல்நிலைப்பள்ளி, கம்பம்: பிளஸ்1, பிளஸ்2 பாடத்திட்டங்கள் அனைத்து போட்டி தேர்வுகளையும் எளிதாக சந்தித்து வெற்றி பெறத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி, நீட், ஜே.இ.இ., மற்றும் யு.பி.எஸ்.சி.,ல் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் பகுத்தாயும் திறன் கேள்விகள் தான் அதிகளவில் கேட்கப்படும். இதை மேம்படுத்தும் வகையில் புத்தகத்தில் பயிற்சி கேள்விகள் இடம் பெற்றுள்ளன. இயற்பியல், வேதியியல், உயிரியியல் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடங்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற தகவல்களுடன் முழுமை பெற்ற பாடங்களாக அமைந்துள்ளன. கியூ.ஆர். கோடு எந்த ஒரு பாடத்தையும் எளிதில் படித்திட உதவும் வகையில் உள்ளது. இது முந்தைய பார்கோடு முறையை விட சிறப்பானது. மாணவர்கள் தங்கள் நினைவு பதிவுகளை ஒழுங்காக வரிசைப்படுத்திக் கொள்ள வேண்டும். எதையும் புரிந்து படித்தால் அனைவரும் வெற்றி பெறலாம்.
ஆலமரம் போல் உறுதி வேண்டும்

சிங்காரவேல், ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஓ.சிறுவயல், காரைக்குடி: தஞ்சாவூரை கஜா புயல் தாக்கிய போது தென்னை மரங்கள் தான் சாய்ந்தன. ஆலமரம், அரச மரம் போன்ற மரங்கள் சாயவில்லை. பாடங்கள் நடத்தும் போதே ஆசிரியர்கள் கூறுவதை ஆழமாக கவனித்தால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையலாம். விடா முயற்சி வெற்றி தரும். நீட் போன்ற பொதுத்தேர்வுகளில் வெற்றி பெற 800 மதிப்பெண்களுக்கு முயன்றால் தான் 760 மதிப்பெண்களாவது பெறமுடியும். பெற்றோர்கள் நீங்கள் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்வை தியாம் செய்கிறார்கள். அதை உணர்ந்து உயர்வான நிலைக்கு வர தன்னம்பிக்கையுடன் முயலுங்கள். ஆர்ட்ஸ் மாணவர்கள் புரபஷனல் படிப்புகளை படித்தால் உயர்ந்த நிலையை அடையலாம்.

குழப்பத்திற்கு கிடைத்தது தீர்வு
புதிய பாடத்திட்டத்தில் தேர்வை எதிர்கொள்வது எப்படி என குழப்பமாக இருந்தது. தினமலர் நிகழ்ச்சியால் தெளிவு பிறந்துள்ளது.தேர்வுக்கு எப்படி தயாராக வேண்டும். எப்படி படிக்க வேண்டும். நேரமேலாண்மையில் எப்படி கவனம் செலுத்துவது என்பதை தெரிந்து கொண்டேன்.எஸ்.தாரிணி, பிளஸ்2, வி.பி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கிருஷ்ணன்கோவில்.
டிப்ஸ்கள் சூப்பர்

கல்வியாளர்கள் அளித்த டிப்ஸ்கள் பயனுள்ளதாக இருந்தன. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு எப்படிப் படிக்க வேண்டும் என்பது குறித்து கல்வியாளர்கள் நல்ல கதையுடன் எளிமையாக விளக்கினர்.ஏ.ஸ்ரீபன், பிளஸ் 1, பெருந்தலைவர் காமராஜர் மேல்நிலைப்பள்ளி, தளவாய்புரம்.
எதிர்பார்ப்பை மிஞ்சிய நிகழ்ச்சி

நிகழ்ச்சி நான் எதிர்பார்த்ததைவிட அருமையாக இருந்தது. தகவல்கள் பயனுள்ளதாக இருந்தன. வாய்ப்பளித்த தினமலருக்கு நன்றி. ஆலோசனையை கேட்ட எனது மகனும் வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு வருவார் என்ற நம்பிக்கை தந்துள்ளது.பால்ராஜ், பெற்றோர், மாங்குடி
உழைத்ததால் வெற்றி

தன்னம்பிக்கை தரக்கூடிய வகையில் கல்வியாளர்கள் இன்றைய நீட், ஜே.இ.இ., மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகள் குறித்து விளக்கினர். ஓய்வின்றி உழைத்தால் அனைவரும் வெற்றி பெறலாம் என்பதை எளிமையாக எடுத்துரைத்தனர். தினமலர் வழங்கிய புத்தகமும் பயனுள்ளதாக உள்ளது.சுமதி சிவராம், பெற்றோர் ராஜபாளையம்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு தினமலர் சார்பில் பிளஸ்,1, 2, பாடங்களில் வரும் முக்கிய வினாக்கள் குறித்த புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
29-நவ-201907:23:24 IST Report Abuse
natarajan s எல்லோரும் எப்படி முதல் ரேங்க் வாங்க முடியும் என்பதை இந்த ஆசிரியர்கள் கொஞ்சம் விளக்குவார்களா? இந்த மாதிரி அறிவுரைகளினால்தான் தேர்வு முடிவு வந்தபின் மாணவர் தற்கொலை அதிகரிக்கிறது. மாணவர்களின் மனா உறுதியை வளர்க்க வேண்டுமே அன்றி தேர்வு மதிப்பெண்தான் வாழ்க்கை என்று ஒரு கட்டாயத்தை உருவாக்க கூடாது.அவர்கள் +2 முடித்து வெளியில் வரும்போதே இந்த சமூகத்தின் சவால்களை எதிர்நோக்கும் வகையில் confidence உள்ளவர்களாக இருக்க வேண்டும். எப்போது பார்த்தாலும் மதிப்பெண், ரேங்க் இல்லை என்றால் நீ waste என்ற மன நிலையை மாணவர்களிடம் வளர்க்க கூடாது. இதுமாதிரி ஜெயித்து காட்டுவோம் போன்ற நிகழ்ச்சிகளால்தான் மாணவர்களின் தன்னம்பிக்கை சீரழிக்கப்படுகிறது . வாழ்க்கை கல்வியை கற்று கொடுங்கள் , மருத்துவம் , பொறியியல் மட்டுமே வாழ்க்கை இல்லை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X