பொது செய்தி

தமிழ்நாடு

இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டடம்

Added : நவ 28, 2019
Advertisement
 இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டடம்

மதுராந்தகம்:படாளத்தில், சேதமடைந்த பள்ளி கட்டடத்தை இடித்து அகற்றி, புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

மதுராந்தகம் ஒன்றியம், படாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சுற்று வட்டார, 90 மாணவ - மாணவியர் பயில்கின்றனர். இப்பள்ளியில், 2005 - -06ம் ஆண்டில், கூடுதலாக, மூன்று வகுப்பறைகள் உடைய இரண்டு கட்ட டங்கள் கட்டப்பட்டன.இக்கட்டடத்தின் தன்மை குறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:படாளம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 15 ஆண்டுகளுக்கு முன், கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. தரமற்ற கட்டடப் பணியால், இக்கட்டடம் சேதமடைந்து இடிந்து, விழும் நிலையில் உள்ளது.இக்கட்டடத்தால், பள்ளி மாணவர்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், முன் எச்சரிக்கையாக, பழுதான கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X