பொது செய்தி

தமிழ்நாடு

உதயமானது திருப்பத்தூர், ராணிப்பேட்டை: புதிய மாவட்டங்கள் துவக்கினார் முதல்வர்

Updated : நவ 29, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (2)
Advertisement
உதயமானது திருப்பத்தூர், ராணிப்பேட்டை,புதிய மாவட்டங்கள், முதல்வர்

திருப்பத்துார்: தமிழகத்தின் 35 மற்றும் 36வது மாவட்டங்களாக திருப்பத்துார் ராணிப்பேட்டையை முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.

வேலுாரை மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து திருப்பத்துார் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு புதிய மாவட்டங்கள் துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.இதன்படி திருப்பத்துார் மாவட்ட துவக்க விழா திருப்பத்துாரில் நடந்தது. துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தலைமை செயலர் சண்முகம் வரவேற்றார்.


உள்ளாட்சி தேர்தல்

புதிய மாவட்டத்தை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கி முதல்வர் பழனிசாமி பேசியதாவது:புதிதாக மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் தொடர்பில்லை. வேண்டுமென்றே எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஒரு பொய்யான கருத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். 2018ல் ஏற்கனவே புதியதாக மறுவரையறை செய்த வார்டுகளின்படி திட்டமிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடக்கும்.

கடந்தாண்டு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது போல இந்தாண்டும் 2.05 கோடி ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


அஞ்சும் ஸ்டாலின்



தொடர்ந்து, 36வது மாவட்டமான ராணிப்பேட்டை துவக்க விழா, நேற்று மதியம், 2:00 மணிக்கு, ராணிப்பேட்டையில் நடந்தது. இதில், முதல்வர் பேசியதாவது:உள்ளாட்சி தேர்தலில், மேயர் பதவிக்கு நேரடி தேர்தலை கொண்டு வந்ததும், மறைமுக தேர்தலை கொண்டு வந்ததும், தி.மு.க., தான். 'தி.மு.க., கொண்டு வந்தால் சரி; அ.தி.மு.க., கொண்டு வந்தால் தவறு' என, ஸ்டாலின் கூறி வருகிறார்.தேர்தலை கண்டு, அவர் அஞ்சுகிறார். ஏன் அஞ்ச வேண்டும்? தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என, ஸ்டாலின் நினைக்கிறார்.


அடிமை அரசா?



பா.ஜ., கூட்டணியில், தி.மு.க., இருந்தபோது சிறந்த அரசு என்றனர். தற்போது, அ.தி.மு.க., - பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளதால், அடிமை அரசு எனக் கூறுவது, எந்த விதத்தில் நியாயம்.
தி.மு.க., போல இல்லாமல், அ.தி.மு.க., தமிழகத்திற்கு, மத்திய அரசின் மூலம் பல்வேறு திட்டங்களை, மருத்துவக் கல்லுாரிகளை கொண்டு வந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் இது போன்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா?இவ்வாறு, அவர் பேசினார்.


கத்தியுடன் வழிமறித்த வாலிபர் கைது



ராணிப்பேட்டையில் விழா முடிந்து, மதியம், 3:15 மணியளவில், பாதுகாப்பு வாகனங்கள்
புடைசூழ, முதல்வரின் கார் கிளம்பியபோது, வாலிபர் ஒருவர் திடீரென வழிமறித்தார்.''எனக்கொரு பிரச்னை இருக்கு; அதை தீர்க்கா விட்டால் செத்துருவேன்,'' என்றார். இதனால்,
பரபரப்பு ஏற்பட்டது. பின், பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தன் கழுத்தில் வைத்துக் கொண்டார்.

பதற்றமடைந்த போலீசார், 'முதல்வர் வாகனம் செல்ல வேண்டும்' எனக் கூறி, வாலிபரை
அப்புறப்படுத்தி, காவலில் வைத்தனர்.பின், அவரிடம் விசாரணை நடந்தது. வாலிபர், குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர், 30, என்பது தெரிந்தது. கடன் கொடுத்தவர்கள் மிரட்டினர் என்றும், எஸ்.பி., வரை புகார் கொடுத்தும், நடவடிக்கை இல்லை என்றும், இதனால், முதல்வரிடம் மனு கொடுக்க வந்ததாகவும், சுதாகர் தெரிவித்தார். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
29-நவ-201911:26:31 IST Report Abuse
Matt P பல மாவட்டங்களை முதலவர் தொடங்கி வைக்கிறார். மாறுதலுக்காக, துணை முதல்வரிடம் பொத்தானை கொடுத்து தொடங்க சொன்னா அவர் தொறக்க மாட்டாரா? என்ன . முதல்வர் தலைமை வகிக்கலாமே முதல்வர் தான் திறக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறதா? என்ன. அரசு விழாக்களில் அரசு தொடர்பான விஷயங்களை மட்டும் பேசி எதிர்க்கட்சி தலைவரை வசைபாடுவதை தவிர்க்கலாமே. .ஆண்கள் முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும் . பிள்ளைகளுக்கு உதாரணமாக வாழ வேண்டும் . ..கடன் கொடுத்தவன் மிரட்டுவது தவறு என்றாலும் அவன் மிரட்ட தான் செய்வான். கடன் தொல்லைகளால் பல சாவுகள் நடந்திருக்கின்றன. ,,குடிப்பதற்கு அப்பன் பணம் தரவில்லை மகன் தரவில்லையென்றே கொலைகளும் நடக்கின்றன. அப்படி அப்பன் மகன்களுக்கும் ஒரு பந்த பாசம் ...அம்பது வயசு ஆன பின்னும் அப்பனிடம் போய் பணம் கேட்கிறார்கள்.. .
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
29-நவ-201905:25:05 IST Report Abuse
Mani . V வெகு விரைவில் (சசிகலா விடுதலை ஆவதற்குள்) நூறாவது மாவட்டத்தை துவக்கி வைக்க நம்ம டாக்டருக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X