பொது செய்தி

தமிழ்நாடு

கிடங்கான நலக்கூடம் ஏழை மக்கள் பாதிப்பு

Added : நவ 28, 2019
Share
Advertisement
படப்பை:படப்பையில், சிமென்ட் குடோனாக மாற்றப்பட்ட சமுதாய நலக்கூடத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, படப்பை ஊராட்சியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.படப்பை பஸ் நிறுத்தம் அருகே, தொகுதி மேம்பாட்டு நிதியில், இரண்டு தளங்களுடன் கூடிய, சமுதாய நலக்கூடம், 2001ல் கட்டப்பட்டது. இங்கு, ஏழை,
 கிடங்கான நலக்கூடம் ஏழை மக்கள் பாதிப்பு

படப்பை:படப்பையில், சிமென்ட் குடோனாக மாற்றப்பட்ட சமுதாய நலக்கூடத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

ஸ்ரீபெரும்புதுார் தாலுகா, படப்பை ஊராட்சியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.படப்பை பஸ் நிறுத்தம் அருகே, தொகுதி மேம்பாட்டு நிதியில், இரண்டு தளங்களுடன் கூடிய, சமுதாய நலக்கூடம், 2001ல் கட்டப்பட்டது. இங்கு, ஏழை, எளிய மக்கள், தங்கள், வீட்டு விசேஷங்களை நடத்தி, மிகவும் பயனடைந்தனர்.

இந்த நிலையில், இந்த சமுதாய நலக்கூடத்தை, சிமென்ட் குடோனாக, குன்றத்துார் ஒன்றிய அதிகாரிகள் மாற்றிவிட்டனர்.இதனால், ஏழை மக்கள், அதிக பணம் கொடுத்து தனியார் மண்டபங்களை நாடி செல்ல வேண்டியுள்ளது.எனவே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக, சமுதாய கூடத்தை மீண்டும் திறக்க வேண்டும் என, படப்பை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X