சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'வாட்ஸ் ஆப் கால்: போலீசாருக்கு புதிய தலைவலி

Added : நவ 28, 2019
Advertisement

காஞ்சிபுரம்:போலீசார் கண்காணிப்பை தடுக்க,'வாட்ஸ் ஆப்' செயலி மூலம், ரவுடிகள் பேசி வருவதால், போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, சூணாம்பேடு, படப்பை போன்ற இடங்களில், ரவுடி கள் அதிகளவில் அட்டகாசம் செய்து வருகின்றனர்.ஆள் கடத்தல், கொலை மிரட்டல், கொலை முயற்சி, கொலை, துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டுவது, ரவுடிகளிடையே மோதல் போன்றவை, தொடர்ந்து நடந்து வருகின்றன.இது போன்ற சம்பவங்களின்போது, ரவுடி களை பிடிக்க, அவர்களின் மொபைல் போன் எண்ணை, போலீசார் டிராக் செய்வர். இந்த நடைமுறையில், பல ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதனாலேயே, சில ரவுடிகள், மொபைல் போனை பயன்படுத்தாமல் உள்ளனர்.சமீப காலமாக, போலீசார் ட்ராக் செய்யாமல் இருக்க, 'வாட்ஸ் ஆப்' கால் மூலம், ரவுடிகள் பேசி வருகின்றனர்.

மொபைல் போனில் சிம் போட்டு, 'வாட்ஸ் ஆப்'பை பதிவு செய்த பின், சிம் கார்டை வெளியே எடுத்து விடுகின்றனர்.சிம்கார்டு இல்லாமலும், வாட்ஸ் ஆப் இயங்கும் என்பதால், வெளியூரில் இருந்தபடியே, ரவுடிகளுக்குள் பேசி வருகின்றனர். போலீசார் நடமாட்டம் குறித்து, ரவுடிகளும் தெரிந்து கொள்கின்றனர். சிம் இல்லாததால், 'வைபை' மூலம் இணைக்கப்பட்டு, 'வாட்ஸ் ஆப்'பை அவர்கள் பயன்படுத்துகின்னர்.இது போன்று தொழில்நுட்பத்தை ரவுடிகள் கையாள்வது, போலீசாருக்கு தொல்லை தருகிறது. இருப்பினும், போலீசாரின் முக்கிய ஒரு பிரிவில் வாட்ஸ்அப் கால்களையும் டிராக் செய்ய முடியும் என கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X