பொது செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் மழை நீர் சேகரிக்க வாய்ப்பு இருக்கு

Added : நவ 28, 2019
Advertisement
 கிணற்றில் மழை நீர் சேகரிக்க வாய்ப்பு இருக்கு

படப்பை:'படப்பை பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில், பயன்பாடின்றி காணப்படும் கிணற்றை, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றலாம்' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்றத்துார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம், படப்பையில் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில், பயன்பாடு இல்லாத கிணறு உள்ளது.குப்பை கொட்டும் இடமாக இருக்கும் இக்கிணற்றை சீரமைத்து, மழை நீர் சேகரிக்க பயன்படுத்தலாம் என, சமூக ஆர்வலர்கள் கூறினர்.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பயன்பாடு இல்லாமல் வீணாகும் கிணற்றை, தனியார் சிலர், மழை நீர் சேகரிக்கும் இடமாக மாற்றுகின்றனர். அந்த முயற்சியை, அரசு ஏன் எடுக்க கூடாது.வீடுகளில், மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என, அரசு விழிவுப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.ஆனால், அரசு அலுவலக வளாகத்தில் உள்ள, இதுபோன்ற கிணறுகள் பயன்பாடு இல்லாமல், குப்பை கொட்டும் இடமாகி வருகிறது.இந்த கிணற்றை சுத்தம் செய்து, மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X