பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த சாலை தடுப்பு வாகன ஓட்டிகள் அச்சம்

Added : நவ 28, 2019
Share
Advertisement
உத்திரமேரூர்:'களியாம்பூண்டி - பெருநகர் சாலை வளைவில், சேதமடைந்துள்ள சாலை தடுப்பை சீரமைக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி - பெருநகர் சாலையில், களியாம்பூண்டி மின்வாரிய அலுவலகம் அருகில், அபாயகரமான சாலை வளைவு உள்ளது.வளைவின் ஓரம் பள்ளம் இருப்பதால், நெடுஞ்சாலைத்துறை சார்பில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக, சாலை தடுப்பு
 சேதமடைந்த சாலை தடுப்பு வாகன ஓட்டிகள் அச்சம்

உத்திரமேரூர்:'களியாம்பூண்டி - பெருநகர் சாலை வளைவில், சேதமடைந்துள்ள சாலை தடுப்பை சீரமைக்க வேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.

உத்திரமேரூர் ஒன்றியம், களியாம்பூண்டி - பெருநகர் சாலையில், களியாம்பூண்டி மின்வாரிய அலுவலகம் அருகில், அபாயகரமான சாலை வளைவு உள்ளது.வளைவின் ஓரம் பள்ளம் இருப்பதால், நெடுஞ்சாலைத்துறை சார்பில், வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்காக, சாலை தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.சமீபத்தில், அவ்வழியே சென்ற வாகனம் மோதியதில், சாலை தடுப்பு சேதமடைந்துள்ளது. இதனால், இரவு நேரத்தில், இந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்கள், வளைவில் திரும்பும்போது, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.எனவே, சேதமடைந்துள்ள சாலை தடுப்பை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X