மஹா., முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்!

Updated : நவ 29, 2019 | Added : நவ 28, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவின், 19வது முதல்வராக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, 59, நேற்று பதவியேற்றார். அவருடன், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த, 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, மாநிலத்தில் ஒரு மாதமாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. மஹாராஷ்டிரா சட்டசபைக்கு, கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - சிவசேனா

மும்பை: மஹாராஷ்டிராவின், 19வது முதல்வராக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, 59, நேற்று பதவியேற்றார். அவருடன், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த, 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இதையடுத்து, மாநிலத்தில் ஒரு மாதமாக நீடித்து வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.latest tamil news


மகாராஷ்ட்ராவின் 19வது முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். கவர்னர் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த 6 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். 20 ஆண்டுகளுக்கு பிறகு மகாராஷ்ட்ராவுக்கு சிவசேனா முதல்வர் கிடைத்துள்ளார். பால் தாக்கரே குடும்பத்திலிருந்து முதல்வராகும் முதல் நபர் உத்தவ்தான்.மஹாராஷ்டிரா சட்டசபைக்கு, கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தது. எனினும், முதல்வர் பதவி பிரச்னையால் கூட்டணி உடைந்தது. பின், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் ஆதரவுடன், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார்.


latest tamil newsபெரும்பான்மையை நிரூபிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார்; முதல்வர் பட்னவிசும் ராஜினாமா செய்தார்.
'மஹா விகாஸ் அகாடி'இதையடுத்து, சிவ சேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் ஆகியவை இணைந்து, 'மஹா விகாஸ் அகாடி' என்ற கூட்டணியை உருவாக்கியது.சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்., காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கடிதத்துடன், கவர்னர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்; அவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து, மும்பை தாதரில் உள்ள, 'சிவாஜி பார்க்' மைதானத்தில் நேற்று மாலை பதவியேற்பு விழா நடந்தது. மஹாராஷ்டிரா முதல்வராக, உத்தவ் தாக்கரே, நேற்று மாலை, 6:40 மணிக்கு பதவியேற்றார். அவருக்கு, கவர்னர் கோஷ்யாரி, பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். உத்தவை தொடர்ந்து, சிவசேனாவை சேர்ந்த, ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய்; தேசியவாத காங்கிரசை சேர்ந்த ஜெயந்த் பாட்டீல், சக்கன் புஜ்பல்; காங்கிரசை சேர்ந்த பாலாசாகேப் தோரட், நிதின் ராவத் ஆகியோர், அமைச்சர்களாக பதவியேற்றனர்.


சிறப்புக்கூட்டம்விழாவில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முன்னாள் முதல்வர் பட்னவிஸ், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், மஹாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், தேசியவாத காங்கிரசின் அஜித் பவார், தேசியவாத காங்., எம்.பி., சுப்ரியா சுலே, உத்தவ் தாக்கரேவின் மனைவி ராஷ்மி, மகன் ஆதித்யா, தொழிலதிபர் முகேஷ் அம்பானி உட்பட பலர் பங்கேற்றனர்.

மஹாராஷ்டிரா சட்டசபையின் சிறப்பு கூட்டத்தை, நாளை மறுதினம் கூட்ட, உத்தவ் தாக்கரே அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்தக் கூட்டத்தில், சபாநாயகர் தேர்தல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சபாநாயகர் தேர்தலில், உத்தவ் அரசு வெற்றி பெற்றால், பெரும்பான்மையை நிரூபித்தது போல் ஆகிவிடும்.


எட்டாவது முதல்வர்மஹாராஷ்டிராவில், எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி.,யாக இல்லாமல், முதல்வராக ஒருவர் பதவியேற்றுள்ளது, இது, எட்டாவது முறையாகும். மஹாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற உத்தவ் தாக்கரே, இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிட்டதில்லை.காங்கிரசை சேர்ந்த ஏ.ஆர்.அந்துலே, வசந்த் தாதா பாட்டீல், சிவாஜிராவ் நிலங்கேக்கர் பாட்டீல், சங்கர்ராவ் சவான், சுஷில்குமார் ஷிண்டே, பிரித்விராஜ் சவான் ஆகியோரும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் சார்பில் முதல்வராக பதவியேற்ற போது, எம்.எல்.ஏ., அல்லது எம்.எல்.சி.,யாக இல்லாமல் இருந்தனர்.


மும்பை உயர் நீதிமன்றம் மறுப்புஉத்தவ் தாக்கரே, முதல்வராக பதவியேற்பதற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.மும்பை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் சிலர், தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:சட்டசபை தேர்தலில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி, ஆட்சி அமைக்கவே, மக்கள் ஓட்டளித்தனர். ஆனால், சிவசேனா, தேர்தலுக்குப் பின், கூட்டணி தர்மத்தை மீறியுள்ளது. இது, ஓட்டளித்த மக்களின் நம்பிக்கைக்கு செய்யும் துரோகமாகும்.அதனால், முதல்வராக பதவியேற்க, உத்தவ் தாக்கரேவுக்கு தடை விதிக்க வேண்டும்; இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியிருந்தனர்.இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க, தலைமை நீதிபதி நண்டரஜாக் தலைமைமையிலான அமர்வு மறுத்துவிட்டது.


விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி; ரூ.10க்கு உணவு

உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசின், குறைந்தபட்ச பொது செயல் திட்டம் நேற்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும். குடிசை பகுதிகளில் வசிப்பவர்களுக்கு, 500 சதுர அடியில் வீடுகள் கட்டி தரப்படும். அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். ஏழைகளுக்கு, 10 ரூபாயில் உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். மழை, வெள்ளத்தால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு திட்த்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும். மாநில அரசு துறைகளில், காலியாக உள்ள பதவிகள் உடனடியாக நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும். இதில், மஹாராஷ்டிராவை சேர்ந்தவர்களுக்கு, 80 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும். இவ்வாறு, பொது செயல் திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.


மோடி, சோனியா வாழ்த்துதந்தையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வரும்படி, உத்தவ் தாக்கரேவின் மகன், ஆதித்ய தாக்ரே, டில்லிக்கு நேற்று முன்தினம்சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன், ராகுல் உட்பட பலருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பதவியேற்பு விழாவில், சோனியா, ராகுல் பங்கேற்கவில்லை. இது பற்றி, உத்தவ் தாக்ரேவுக்கு, சோனியா எழுதிய கடிதத்தில், 'ஆதித்யா நேரில் அழைப்பு விடுத்தும், என்னால், விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். உங்களின் புதிய வாழ்க்கை சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்' என கூறியிருந்தார்.

ராகுலும், உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து தெரித்து கடிதம் அனுப்பியிருந்தார். இதேபோல், உத்தவ் தாக்கரேவுக்கு, பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


அஜித் பவாருக்குபதவி இல்லை?

மஹாராஷ்டிரா அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்திய அஜித் பவார், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின், தேசியவாத காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்றார். 'எப்போதும் தேசியவாத காங்கிரசில் தான் இருப்பேன். சரத் பவார் தான், என் தலைவர்' என, தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு பதவியேற்ற போது, அதில் அஜித் பவாருக்கு இடமளிக்கப்படவில்லை. எனினும், உத்தவ் அரசு, சட்டசபை யில் பெரும்பான்மையை நிரூபித்தபின், அஜித் பவாரை துணை முதல்வராக பதவியேற்க வைக்க, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


பதவிக்கு வந்த தாக்கரே குடும்பம்


சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரே கட்சி துவக்கிய போது 'நானோ என் குடும்பத்தாரோ ஆட்சியில் எந்த பதவிக்கும் வரமாட்டோம்' என திட்டவட்டமாக அறிவித்தார்.
ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக அவரது மகன் உத்தவ் தாக்கரே 59 நேற்று முதல்வராக பொறுப்பேற்றார். உத்தவ் மும்பையில் 1960 ஜூலை 27ல் பிறந்தார். இவரது தந்தை அரசியலில் இருந்தாலும் இவர் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

பட்டப்படிப்பு முடித்துள்ள உத்தவ் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிக்கவர். பல புகைப்பட
கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.கடந்த 2002ல் தான் அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கினார். இவரது தலைமையில் சிவசேனா 2002ல் மும்பை மாநகராட்சி தேர்தலில் அதிக இடங்களில் வென்று மேயர் பதவியை கைப்பற்றியது. இதற்குப்பின் 2003ல் சிவசேனா செயல் தலைவரானார். 2006 ஜூன் முதல் நேற்று வரை கட்சி பத்திரிகை 'சாம்னா'வின் ஆசிரியராக பணியாற்றினார்.
பால் தாக்கரே மறைவுக்குப்பின் உத்தவ் 2013 ஜன. 23ல் கட்சி தலைவரானார். இவருக்கு ஆதித்ய தாக்கரே, தேஜஸ் தாக்கரே என இரண்டு மகன்கள். ஆதித்யா எம்.எல்.ஏ. வாக இருக்கிறார்.

மஹாராஷ்டிராவில் சிவசேனா சார்பில் மனோகர்ஜோஷி, நாராயண் ரானே ஆகியோருக்கு பின் மூன்றாவது முதல்வராக நேற்று பதவியேற்றார்.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K RAMACHANDRAN - CHENNAI,இந்தியா
29-நவ-201917:12:10 IST Report Abuse
K RAMACHANDRAN மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், சோனியா, ராகுல், அமரீந்தர் சிங், நிதீஷ், கிரண் ரெட்டி, சந்திரசேகர ராவ் ஆகியோர் பங்கு பெறாத விழாவில் சுடாலின் பங்கு பெற்றது அவருக்கு வரலாற்று ஞானம் சிறிது குறைவானதனால் தான். ஒரு காலத்தில் தமிழர்களை ஓட ஓட பம்பாய் நகரில் விரட்டியவர்கள் தான் சிவசேனா கட்சியினர் என்பது அவருக்கு தெரியவில்லை.
Rate this:
Cancel
Thiru - Chennai,இந்தியா
29-நவ-201916:30:37 IST Report Abuse
Thiru வாழ்த்துக்கள் ஐயா, தர்மன் போல் ஆட்சி செய்வீர்கள் என்று நம்புவோமாக. ஆனால் நீங்க தற்பொழுது அம்மைத்த கூட்டணிக்கவா மக்கள் வாக்களித்தார்கள் ???. உங்கள் தற்போதைய கூட்டணியில் காங்கிரஸும் உள்ளது, அது ஒரு மிக பெரிய நெருக்கடியில் முடியும், சூது நிறைந்தது, எச்சரிக்கையாக இருங்கள். இது ஒரு கூடாநட்பு கூட்டணி.
Rate this:
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
29-நவ-201910:38:29 IST Report Abuse
ganapati sb காவி உடை மற்றும் நெற்றி நிறைய சிந்துர திலகம் அணிந்து பதவியேற்ற தீவிர இந்துத்துவவாதி பால் தாக்ரே புதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு வாழ்த்துக்கள் போலி மதசார்பின்மை பேசும் இத்தாலி கான் க்ராஸை அதை எதிர்த்து உருவான தேசிய காங்கிரஸ் இருவரையும் பதவியில் பங்கு கொடுத்து இந்துத்துவத்தை ஆதரிக்க செய்த பாங்கிற்கு பாராட்டுக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X