திருப்போரூர்:புங்கேரி அரசு பள்ளிக்கு, 18 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது.
திருப்போரூர் அடுத்த, புங்கேரி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இதன் வளாகத்தில் அங்கன்வாடி மையமும் உள்ளது.இங்கு, சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளி வளாகத்திற்குள் ஆடு மாடுகள் உலாவுகின்றன. அவ்வப்போது, சமூக விரோதிகளும் நுழைந்து, மது அருந்துகின்றனர்.பள்ளி மற்றும் மாணவர்களின் நலன் கருதி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துவந்தது.இதையடுத்து, 18 லட்சம் ரூபாய் மதிப்பில், 350 மீட்டர் நீளத்திற்கு, பள்ளி வளாகம் முழுவதும், சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இப்பணி ஒரு மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.