சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியுடன் வழிமறித்த வாலிபர்

Added : நவ 28, 2019
Advertisement

ராணிப்பேட்டையில் விழா முடிந்து பகல் 3:15 மணியளவில் பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ முதல்வரின் கார் கிளம்பியபோது வாலிபர் ஒருவர் திடீரென வழிமறித்தார்.''எனக்கொரு பிரச்னை இருக்கு; அதை தீர்க்கா விட்டால் செத்துருவேன்'' என்றார். பின் பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தன் கழுத்தில் வைத்துக் கொண்டார்.பதற்றமடைந்த போலீசார் 'முதல்வர் வாகனம் செல்ல வேண்டும்' எனக் கூறி வாலிபரை அப்புறப்படுத்தி காவலில் வைத்தனர்.பின் அவரிடம் விசாரணை நடந்தது. வாலிபர் குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் 30 என்பது தெரிந்தது. அவருக்கு கடன் கொடுத்தவர்கள் மிரட்டியுள்ளனர். இது குறித்து எஸ்.பி. வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் முதல்வரிடம் மனு கொடுக்க வந்ததாக தெரிவித்துள்ளார். சுதாகரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.புதிய மாவட்டங்கள் விபரம்திருப்பத்துார் 1798 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. 11 லட்சத்து 11 ஆயிரத்து 812 மக்கள் வசிக்கின்றனர். திருப்பத்துார் வாணியம்பாடி ஆகிய வருவாய் கோட்டங்கள் உள்ளன.திருப்பத்துார், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, ஆம்பூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளும், எம்.பி. தொகுதியை பொறுத்த வரை வேலுார், திருவண்ணாமலையில் சில பகுதிகளும் இம்மாவட்டத்தில வருகின்றன.ராணிப்பேட்டை 2234 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. 12 லட்சத்து 10 ஆயிரத்து 277 மக்கள் வசிக்கின்றனர். அரக்கோணம் ராணிப்பேட்டை வருவாய் கோட்டங்கள் உள்ளன. ராணிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர், ஆற்காடு ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளும் எம்.பி.யை பொறுத்த வரை அரக்கோணம் மட்டும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X