பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் உதயமானது செங்கல்பட்டு மாவட்டம்

Added : நவ 28, 2019
Advertisement
 மீண்டும் உதயமானது செங்கல்பட்டு மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து, செங்கல்பட்டு மாவட்டம், இன்று உதயமாகிறது. 22 ஆண்டுகளுக்கு பின், செங்கல்பட்டு மாவட்டம் உருவானாலும், செங்கைக்கு, ஆங்கிலேயர் காலத்திலேயே அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கி.பி., முதலாம் நுாற்றாண்டில், காஞ்சிபுரம் மாவட்ட பகுதி, தொண்டைமான் மரபினர், நிர்வகித்ததாக கருதப்படுகிறது.தலைநகர்இந்நுாற்றாண்டின் இறுதியில், பல்லவர்கள் ஆட்சி புரிய துவங்கினர்; 10ம் நுாற் றாண்டு வரை, பல்லவர்களே இப்பகுதியை ஆண்டனர்.பின், 13ம் நுாற்றாண்டு வரை, சோழர்களும், 13 - 17ம் நுாற்றாண்டு வரை, விஜயநகர பேரரசர்களும் ஆண்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, ஆங்கி லேயர்களின் ஆட்சி காலத்தில், 1788ல், செங்கல்பட்டு மாவட்டம், முதன்முதலாக உதயமானது.தற்போதைய, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டமாக, 1793 முதல், 1997 வரை அமைந்திருந்தது.செங்கல்பட்டு தலைநகராக மதுராந்தகம் அடுத்த, கருங்குழி இருந்தது. தொடர்ந்து, காஞ்சிபுரம், சென்னையின் சைதாப்பேட்டை ஆகிய பகுதிகள், தலைநகராக இருந்தன.போராட்டம்திராவிடர் காலமான, 1968ல், முதல்வராக இருந்த அண்ணாதுரை, செங்கல்பட்டு மாவட்ட தலைநகரம், காஞ்சிபுரம் என, அறிவித்தார்.
மாவட்ட நீதித்துறை தலைமையிடமாக, செங்கல்பட்டு கொண்டு வரப்பட்டது.இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, 1997, ஜூலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தை, இரு மாவட்டங்களாக பிரித்து, காஞ்சிபுரம், திருவள்ளூர் என, உருவாக்கப்பட்டது. செங்கல்பட்டு அண்ணா, திருவள்ளூர் என, இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து வந்த அ.தி.மு.க., ஆட்சியில், செங்கல்பட்டு அண்ணா மாவட்டம், செங்கல்பட்டு எம்.ஜி.ஆர்., மாவட்டமாக, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பின், மீண்டும், காஞ்சிபுரம் மாவட்டமாக மாற்றப்பட்டது.இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட தலைநகரான காஞ்சிபுரம் வருவதற்கு, செங்கல்பட்டு சுற்று வட்டார மக்கள், 90 கி.மீ., பயணம் செய்ய வேண்டியிருந்தது.தொலை துாரத்தில் இருந்து வர, பல மணி நேரமானது; சொற்ப பணமும் விரயம் ஆனதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.இதனால், மாவட்டத்தை இரண்டாக பிரித்து, செங்கல்பட்டு மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது; பல போராட்டங்கள் நடந்தது.தனி மாவட்டம்இச்சூழலில், 2019, ஜூலை மாதம், சட்டசபை கூட்டத்தில், 110 விதியின் கீழ், 'காஞ்சிபுரத்தை பிரித்து, செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்தார்.இதற்கடுத்து நடந்த பலகட்ட பணிகளுக்கு பின், 22 ஆண்டுகள் கழித்து, தனி சூரியனாக, செங்கல்பட்டு மாவட்டம், இன்று உதயமாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X