மருத்துவக் கழிவுகளால் பள்ளி மாணவர்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவக் கழிவுகளால் பள்ளி மாணவர்கள் அவதி

Added : நவ 28, 2019
 மருத்துவக் கழிவுகளால் பள்ளி மாணவர்கள் அவதி

கருக்குப்பேட்டை:பள்ளிக்கு செல்லும் ஒத்தையடிப்பாதை அருகே, மருத்துவக் கழிவுகளை கொட்டி, இரவில் எரிப்பதால், சுகாதார கேடு ஏற்படுகிறது என, சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
வாலாஜாபாத் அடுத்த, கருக்குப்பேட்டை கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான காசி விஸ்வநாதர் கோவில் நிலம், தொடக்கப் பள்ளி அருகே உள்ளது.இந்த நிலத்தில், ஒத்தையடிப்பாதை வழியாக, ஏகனாம்பேட்டை, கருக்குப்பேட்டை, அய்யன்பேட்டை காலனி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் சிலர், கருக்குப் பேட்டை தொடக்கப் பள்ளிக்கு செல்கின்றனர்.அதே ஒத்தையடிப்பாதை ஓரமாக, சிலர் மருத்துவக் கழிவுகளை கொட்டி எரிக்கின்றனர்.

அவ்வழியே செல்லும் நபர்களுக்கு, ஊசி காலில் குத்திக் கொள்வதாக புகார் கூறப்படுகிறது.மேலும், இரவு நேரங்களில் மருத்துவக்கழிவுகள் எரிப்பதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.எனவே, கோவில் நிலத்தில் மருத்துவக்கழிவுகளை கொட்டி எரிப்போர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துஉள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X