அமெரிக்க குடியுரிமைக்காக காத்திருக்கும் 2 லட்சம் இந்தியர்

Added : நவ 28, 2019
Advertisement

வாஷிங்டன் 'கிரீன் கார்டு' எனப்படும் அமெரிக்காவின் நிரந்தர குடியுரிமையைப் பெறுவதற்காக, 2.27 லட்சம் இந்தியர்கள் காத்திருக்கின்றனர்.அமெரிக்காவில் நீண்டகாலம் பணியாற்றும் வெளிநாட்டவர்களுக்கும், அவர்களின் நெருங்கிய றவினர்களுக்கும்குடியுரிமை வழங்கப்படுகிறது. இந்த குடியுரிமைக்காக, தற்போது, 40 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். ஆனால், ஆண்டுக்கு,2.26 லட்சம் பேருக்குமட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது.இவ்வாறு நிரந்தரக் குடியுரிமை கேட்டு, வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்த, 15 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.இந்தப் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மொத்தம், 2.27 லட்சம்இந்தியர், அமெரிக்க குடியுரிமைக்காக காத்திருக்கின்றனர்.
போலி பல்கலை மாணவர்கள் கைது

விசா வழங்கும் முறையில் நடைபெறும் மோசடியை கண்டுபிடிப்பதற்காக, அமெரிக்காவின் குடியேற்றத் துறை சார்பில், டெட்ராய்ட் நகரில் போலி பல்கலை துவக்கப்பட்டது. தற்போது அது மூடப்பட்டுள்ளது. இந்தப் பல்கலையில் சேருவதற்கு, 600 பேர் பதிவு செய்தனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்.இந்தாண்டு மார்ச்சில், 161 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர். அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.மேலும், 90 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், மாணவர்களை ஏமாற்றும் வகையில், அரசே இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவதற்கு, பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X