ஹாங்காங் மசோதாவில் டிரம்ப் கையொப்பம் தக்க பதிலடி தர தயார் என சீனா எச்சரிக்கை

Added : நவ 28, 2019
Advertisement

வாஷிங்டன், :சீனாவின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஹாங்காங் ஜனநாயக போராட்டங்களுக்கு ஆதரவான மசோதாவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.கிழக்காசிய நாடான, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், குற்றவாளிகளை நாடு கடத்தும் மசோதாவுக்கு, மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து, ஹாங்காங் முழுவதும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, அந்த மசோதா 'வாபஸ்' பெறப்பட்டது. ஆனாலும், ஹாங்காங்கில் பல்வேறு ஜனநாயக சீர்திருத்தங்களை வலியுறுத்தி, மக்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.இந்நிலையில், ஹாங்காங்கில் நடக்கும் ஜனநாயக போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் மசோதா, அமெரிக்க பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, அனைத்து உறுப்பினர்களும், ஏகமனதாக ஆதரவு அளித்தனர்.ஹாங்காங்கில், மனித உரிமைகளை மீறுவோர் மீது, பொருளாதார தடைகளை விதிக்கவும், அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கவும், இந்த மசோதா வகை செய்கிறது. இந்த மசோதா சட்டமானால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்தது.கடும் எதிர்ப்பையும் மீறி, ஹாங்காங் போராட்டங்களுக்கு ஆதரவான மசோதாவில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். சீன அதிபர் ஸீ ஜின்பிங் மீதுள்ள மரியாதையினாலும், சீனா மற்றும் ஹாங்காங் மக்கள் மேல் உள்ள மதிப்பினாலும், இந்த மசோதாவில் கையெழுத்திட்டதாக, அதிபர் டிரம்ப் கூறினார்.இது குறித்து சீன வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:ஹாங்காங் விவகாரத்தில் தலையிடுவது என்பது, சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை போன்றது. இத்தகைய ஆதிக்கம் செலுத்தும் போக்குக்கு, சீன அரசும், மக்களும் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு தக்க பதிலடி தர, சீனா தயாராக உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X